பிக்பாஸ் வீட்டில் காத்திருக்கும் அதிர்ச்சி தண்டனை

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

கடந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டின் செட், பூந்தமல்லியை அடுத்து ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்தது.

அனைத்து வசதிகளும் அந்த வீட்டுக்குள்ளேயே இருக்கும். தற்போது இரண்டாவது சீசனும் அதே இடத்தில்தான் பிக்பாஸ் வீட்டின் செட் அமைக்கப்பட்டுள்ளது.

வீட்டின் அமைப்பில் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பிக் பாஸ் வீட்டின் தோட்டத்துக்கு அருகே சிறை போன்ற ஒரு செட்டப் இருக்கிறது. சிறைக்குள் ஒரே ஒரு இரும்புக் கட்டில், வெளிச்சத்துக்கு ஒரு லைட். மெத்தை, போர்வை, ஏசி, பேன் எதுவும் கிடையாது.

பிக் பாஸ் வீட்டில் பொய் சொல்பவர்களுக்கும் வேலை செய்யாமல் தூங்குபவர்களுக்கும் பிக் பாஸ் சிறையில் அடைத்துப் பூட்டிவிடும் தண்டனை தருவார்கள்.

இந்த தண்டனை போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியான ஒன்றுதான்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்