பாலியல் புகாரில் சிக்கிய நடிகை மெஹரீன்... அமெரிக்க அதிகாரிகளின் விசாரணை?

Report Print Vijay Amburore in பொழுதுபோக்கு
38Shares
38Shares
lankasrimarket.com

பாலியல் புகார் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் நடத்திய விசாரணை குறித்து நடிகை மெஹரீன் விளக்கம் அளித்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகையான மெஹரீன், "நெஞ்சில் துணிவிருந்தால்" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். இவர் தற்போது விஜய் தேவரகொண்டாவின் நோட்டா படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தன்னுடைய விடுமுறையை கழிப்பதற்காக அமெரிக்க மற்றும் கனடாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்பொழுது, அமெரிக்க காவல்துறையால் திடீரென சோதனை செய்யப்பட்டார்.

வன்கூவரில் இருந்து லாஸ் வேகாஸுக்கு குடும்பத்துடன் பயணம் செய்த போது, மெஹரீன் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரது உடமைகள் அனைத்தையும் நீண்ட நேரங்களாக பரிசோதனை செய்தனர். இதனையடுத்து அவர் பாலியல் புகாரில் சிக்கியுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட ஆரம்பித்தன.

இந்த நிலையில் அதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக மெஹரீன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், அமெரிக்க அதிகாரிகள் என்னிடம் விசாரணை மேற்கொள்ளும்பொழுது, நான் தெலுங்கு படங்களில் நடிக்கிறேன் என கூறினேன். பின், நீங்கள் எதற்கு அமெரிக்கா வந்தீர்கள் என கேட்டனர். அதற்கு விடுமுறை நாட்களை கழிப்பதற்காக வந்திருக்கிறேன் என தெரிவித்தேன்.

அமெரிக்க வந்த சில நடிகைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் பிறகு தான் எனக்கு விஷயம் தெரிந்தது. இதனையடுத்து அதிகாரிகள் என்னிடம் மன்னிப்புகோரியதோடு, எந்த பிரச்னையும் இல்லாமல் பயணத்தை தொடரவும் அனுமதித்தனர்.

அதிகாரிகள் என்னிடம் விசாரணை மேற்கொண்ட தருணத்தை மிகவும் தர்ம சங்கடமாக உணர்ந்தேன். யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக மற்றவர்கள் பாதிக்கப்படுவது தவறு. அவர்கள் அனைவரும் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், அமெரிக்க பயணத்தின்போது என்ன நடந்தது என்பதை கற்பனையாக எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு விளக்கம் கொடுப்பதற்காகவே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்