அப்பாவின் மரணத்தின்போது உறுதுணையாக இருந்த நித்யாவுக்கு நன்றி! பாலாஜி உருக்கம்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு
182Shares
182Shares
lankasrimarket.com

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில், நீங்கள் யாரையெல்லா மிஸ் செய்கிறீர்கள், யாருக்குகெல்லாம் நன்றி சொல்ல என்பது குறித்து பேசலாம் கூறப்பட்டது.

இதன்போது, போட்டியாளர்கள் தங்கள் குடும்பத்து உறுப்பினர்களிடம் அன்பை வெளிப்படுத்தினர். அப்போது பேசிய பாலாஜி, எங்க அப்பா திடீர்னு உடம்பு முடியல. உயிருக்குப் போராடிட்டிருந்தார். என்ன பண்றதுன்னே தெரியல. எனக்கு காரும் ஓட்டத்தெரியாது.

நித்யாதான் அப்பாவைக் கூட்டிட்டு மருத்துவமனைக்கு சென்றார். நல்லா பாத்துக்கிட்டா. ஆனா அப்பா இறந்துட்டார். அப்ப எங்கிட்ட காசும் இல்ல. இந்த சமயத்துல நித்யாதான் எனக்கு எல்லாவிதமாவும் உதவியாக இருந்தார். எங்க அப்பாவுக்கு என்னை விட நித்யாவைத்தான் ரொம்பப் பிடிக்கும்.

இதனால் நான் நித்யாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் நான் கோப்பட்டாலும் உடனே சமாதானமாகி கோபப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டு சமாதானம் ஆகிவிடுவேன். என்னை பற்றி எனது நண்பர்களுக்கு தான் முழுமையாக தெரியும். எனக்கு மிகவும் பிடித்த எனது மகள் போஷிகாவை நான் மிஸ் செய்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்