பிரபல திரைப்பட நடிகை வினோதினிக்கு நடந்த சோகம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
109Shares
109Shares
lankasrimarket.com

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட உயிருக்கு உயிரான அக்காவை இழந்துவிட்டதாக நடிகை வினோதினி கூறியுள்ளார்.

1990-களில் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர் வினோதினி.

வண்ண வண்ண பூக்கள், ரட்சகன், உனக்காக எல்லாம் உனக்காக, சூரியன் சந்திரன் போன்ற பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்த வினோதினி சமீபகாலமாக நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், எனக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

குடும்பத்துடன் தற்போது மகிழ்ச்சியாக உள்ளேன், ஆனால் என் வாழ்வில் மிகபெரிய சோகம் ஒன்று உள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த என் ஆருயிர் அக்காவை 2 ஆண்டுகள் கூடவே இருந்து கவனித்து கொண்டேன்.

ஆனால் அவர் நோய் பாதிப்பால் இறந்துவிட்டார். அவரின் மறைவு இன்றும் எனக்கு பெரிய இழப்பு என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்