புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ்ப்பட நடிகை: தற்போது இப்படி தான் உள்ளார்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
97Shares
97Shares
lankasrimarket.com

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சோனாலி பிந்த்ரே தலைமுடியை வெட்டிய தனது சமீபத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழில் காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம் போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சோனாலி பிந்த்ரே.

இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் சமூகவலைதளம் மூலம் வெளியுலகுக்கு அறிவித்தார்.

இதையடுத்து தற்போது நியூ யோர்க்கில் புற்றுநோய்க்கு தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது எடுத்துள்ள தனது சமீபத்திய புகைப்படத்தை சோனாலி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அதில் தலைமுடியை அதிகளவு வெட்டியுள்ளார்.

சிகிச்சை முறைக்காகவே இவ்வாறு வெட்டியுள்ளார்.

அந்த பதிவில், நம்முள் உள்ள பலத்தை வெளியில் கொண்டு வராத வரை நாம் எவ்வளவு பலமானவர்கள் என்பது நமக்கு தெரியாது.

கடந்த சில நாட்களாக நான் பெறும் அன்பின் வெளியாடு கணக்கிட முடியாத அளவில் உள்ளது என பதிவிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்