இந்த வயதில் இப்படி உடை உனக்கு தேவையா? நடிகை கஸ்தூரி வெளியிட்ட புகைப்படத்தால் ஆத்திரம்

Report Print Santhan in பொழுதுபோக்கு
432Shares
432Shares
lankasrimarket.com

பிரபல திரைப்பட நடிகை கஸ்தூரி வெளியிட்ட புகைப்படத்தைக் கண்ட இணையவாசிகள் இந்த வயதில் இது உங்களுக்கு தேவையா என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நடிகையான கஸ்தூரி 1990-ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் ஒரு வெற்றி நாயாகியாக வலம் வந்தார். அதன் பின் திருமணமானதால், சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார்.

இந்நிலையில் திடீரென்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டுவிட்டரில் காலடி எடுத்து வைத்த இவர், அதன் பின் தனக்கு மனதில் தோன்றிய விஷயங்கள் டுவிட்டரில் கூறி ரசிகர்களிடம் மட்டுமின்றி பலர் சர்ச்சைகளிலும் சிக்கினார்.

இதற்கிடையில் அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கவர்ச்சி உடையில் பின்புறம் தெரியும்படி புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்து, அதோடு இது யார் என்று கண்டுபிடியுங்கள் என்றும் பதிவேற்றம் செய்திருந்தார்.

இதைக் கண்ட இணையவாசிகள் இந்த வயதில் இப்படி ஒரு உடை தேவையா, என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் நடிகை கஸ்தூரி தற்போது தமிழ்ப்படம் 2 ஒரு குத்தாட்டப் பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்