முகேஷ் அம்பானி - சக்ஸஸ்புல் மனிதரானது இப்படித்தான்

Report Print Raju Raju in தொழிலதிபர்
0Shares
0Shares
lankasri.com

முகேஷ் அம்பானியின் முழு பெயர் முகேஷ் திருபாய் அம்பானி ஆகும்.

இந்திய வர்த்தக உலக ஜாம்பவான் திருபாய் அம்பானியின் மூத்த மகன் தான் முகேஷ் அம்பானி அவர்கள்.

இவர் இந்திய நாட்டில் உள்ள மும்பை மாநிலத்தில் 1957 ஆம் வருடம் ஏப்ரல் 19ஆன் திகதி பிறந்தார். இவருக்கு நீதா அம்பானி என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

தன் பள்ளி படிப்பை மும்பையில் உள்ள தனியார் பள்ளியில் முடித்த இவர் பின்னர் மும்பை பல்கலைகழகத்தில் ரசாயன பொறியியல் துறையில் பி.இ பட்டம் பெற்றார்.

அதன்பின் இரண்டாண்டு படிப்பாக எம்.பி.ஏ படிக்க அமெரிக்க சென்ற இவர் ஒரு ஆண்டு படிப்பை மட்டும் முடித்து இந்தியா திரும்பினார்.

1980களில் முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானிக்கு பாலிஸ்டர் நூல் உற்பத்தி செய்யும் ஆலை அமைக்க உரிமம் கிடைத்தது.

இந்த தொழிலில் தந்தைக்கு உதவியாக முகேஷ் இருந்தார். பின்னர் 1981 ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பொறுப்பை ஏற்றார். பெட்ரோலிய கத்தரிப்பு, எரிவாயு ஆராய்ச்சி என தொழில் வர்த்தகத்தை முகேஷ் அம்பானி விரிவுபடுத்தினார்.

அந்த காலகட்டத்திலேயே தகவல் தொழில் நுட்ப நிறுவனமான இன்போகாம் நிறுவனத்தை தொடங்கினார். இது பின்னர் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் என பெயர் மாற்றப்பட்டது.

இந்த சமயத்தில் அவரின் தந்தை திருபாய் ஆம்பானி இறந்து விட முகேஷ் தான் ரிலையன்ஸ் நிறுவனத்தை முழுவதும் ஆள போகிறார் என பலர் நினைக்க அவர் சகோதரர் அனில் அம்பானி அவரிடம் சண்டையிட்டார்.

பின்னர் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ், பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் முகேஷ்யிடமும், ரிலையன்ஸ் கேப்பிடல், இன்போகம் அனிலிடமும் பிரித்து தரப்பட்டது.

அமெரிக்கா இந்திய வர்த்தக கவுன்சிலின் தலைவர் விருது, என்.டி.டி.வி மூலம் சிறந்த வர்த்தக தலைவர் விருது போன்ற பல விருதுகளை முகேஷ் அம்பானி வாங்கியுள்ளார்.

முகேஷ் அம்பானி பற்றி சில சுவாரசியமான தகவல்கள்
  • பல இந்தியர்கள் விரும்பி உண்ணும் உணவுகளான சப்பாத்தி, சப்ஜி போன்றவற்றை தான் இவரும் விரும்பி உண்பார்.
  • முகேஷ் அம்பானி சைவ உணவை மட்டுமே உண்ணும் பழக்கமுடையவர்.
  • முகேஷ் வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தால் அவர்கள் விரும்பும் உணவை கேட்டறிந்து, அதை தன் கையாலேயே அவர்களுக்கு பரிமாறுவது அவரின் வழக்கம்.
  • தன் 50தாவது பிறந்தநாளை மட்டும் தனக்கு கீழ் இருக்கும் ஊழியர்களுடன் முகேஷ் அம்பானி கொண்டாடினார். மற்ற படி அவர் தன் பிறந்தநாளை கொண்டாடியதில்லை.
  • அவருடன் பணிபுரிபவர்கள் அவர் எந்த காரணத்துக்காகவும் கோபப்பட்டு யாரையும் திட்டி நாங்கள் பார்த்ததில்லை என்று கூறுகின்றனர்.
  • தினமும் நடு ராத்திரி இரண்டு மணி வரை தனது பணியை செய்யும் முகேஷ் காலையில் 10.30 மணிக்கு எழுவது தான் வழக்கம்.
  • இவர் தனது தந்தையை போலவே வெள்ளை சட்டையும், டார்க் கலரில் பேண்டும் அதிகம் அணிவார்.
  • இந்தி பாடல்களை ஞாயிற்று கிழமை விடுமுறை வேளைகளில் விரும்பி கேட்பார்.
  • தொலை தூரத்துக்கு வாக்கிங் செய்வது என்றால் முகேஷ் அம்பானிகு கொள்ளை பிரியம்.

இன்று முகேஷ் அம்பானி பல தடைகள், சோதனைகளை கடந்து சிறந்த தொழிலதிபராக வெற்றிநடை போட்டு வருகிறார்.

பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள இந்தியாவில் முதல் பத்து பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments