தந்தையையே முந்திய மகன்! பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் சாதித்த கதை

Report Print Raju Raju in தொழிலதிபர்
0Shares
0Shares
lankasrimarket.com

ஒரு சிறந்த தொழிலதிபர் என்பவர் தனக்கான வாய்ப்பை பிறர் கண்களுக்கு படும் முன்னரே கண்டறிபவராவார்! இதை சொன்னவர் திலீப்!

உலக புகழ்பெற்ற சன்பார்மா நிறுவனத்தின் தலைவர். இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய பணக்காரர்.

திலீப் இந்தியாவின் மும்பையில் 1955ல் அக்டோபர் 1ஆம் திகதி பிறந்தார். அவர் பிறந்த சில மாதங்களிலேயே திலீப் குடும்பம் கொல்கத்தாவுக்கு குடி பெயர்ந்தது. கொல்கத்தாவில் பள்ளி படிப்பையும், பி.காம் பட்டபடிப்பை முடித்த திலீப். தனது தந்தை செய்துவந்த ஃபார்மா மொத்த வியாபார தொழிலில் உதவியாக இருந்து வந்தார்

பின்னர் தனது தந்தையிடம் 10 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்று சன் ஃபார்மாசூட்டிகல் நிறுவனத்தை 1982 இல் தொடங்கினார். அவர் தொழிலில் ஆரம்பத்தில் ஒரு ஊழியர் தான் உடன் இருந்தார்.

பின்னர் தந்தையிடம் வாங்கிய கடனை அடைத்த திலீப், குஜராத்தில் இதற்கான தொழிற்சாலையையும் தொடங்கினார்.

மனநலம் சம்பத்தப்பட்ட ஐந்து மருந்துகளை முதலில் வெளியிட்டார் திலீப். பின்னர் மெல்ல தொழில் வளர்ச்சியடைய 1994ல் ஐபிஓ விற்கு சென்ற சன் ஃபார்மா, தனது விற்பனையை 24 நாடுகள் அளவில் 1996 இல் அடைந்தது.

2011ல் புகழ்பெற்ற மருத்துவ நிறுவனமான ரான்பாக்சியை சன்பார்மா வியாபார ரீதியாக முந்தி நல்ல பெயர் பெற்றது.

பின்னர் திலீப் சன் ஃபார்மாவை ஐரோப்பா மற்றும் அமெரிக்க சந்தையில் விரிவாக்கம் செய்தார்.

தற்போது உலகளில் சன்பார்மா மருத்துவ நிறுவனம் 5வது இடத்திலும், இந்திய அளவில் முதலிடத்திலும் உள்ளது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments