உலகின் சக்தி வாய்ந்த பெண் இந்திரா நூயி: பெப்சி & கோ தலைவரின் கதை

Report Print Raju Raju in தொழிலதிபர்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

பெப்ஸி & கோ! இன்று உலகளவில் மிக பிரபலமாக இருக்கும் பன்னாட்டு உணவு மற்றும் குளிர்பான நிறுவனமாகும்.

இதன் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் தற்போது இருப்பவர் இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி (61)

advertisement

இந்திரா நூயி கடந்த 1955ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் திகதி தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் பிறந்தார்.

தனது பள்ளிப்படிப்பை ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் முடித்த இந்திரா, பின்னர் கடந்த 1974ல் வேதியியல் மற்றும் இயற்பியல் துறையில் தனது பட்டபடிப்பை முடித்தார்.

பின்னர் எம்பிஏ முதுகலை பட்டப்படிப்பை கொல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் முடித்தார்.

அதன் பிறகு, ஜான்சன் & ஜான்சன் தயாரிப்பு மேலாளர் பணியில் இந்திரா சேர்ந்தார்.

பின்னர் மீண்டும் தனது படிப்பை தொடர்ந்த இந்திரா 1978ஆம் ஆண்டு யேல் மேலாண்மை கல்வி நிறுவனத்தில் பொது மற்றும் தனியார் மேலாண்மை பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

பின்னர், 1980ல் போஸ்டன் கன்சல்ட்டிங் குரூப் (BCG) நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.

மேலும் மோட்டோரோலா மற்றும் ஏசியா பிரவுன் பொவரி ஆகியவற்றில் திட்டம் தொடர்பான பதவிகளையும் வகித்தார்.

அங்கு பணிபுரிந்த பின்னர் கடந்த 1994ல் பெப்ஸி & கோ நிறுவனத்தில் உறுப்பினராக சேர்ந்த இந்திரா பின்னர் 2001ல் அந்நிறுவனத்தின் தலைவராகவும், தலைமை நிதி அதிகாரியாகவும் பதவியேற்றார்.

இந்திரா நிதி அதிகாரியாக பொறுப்பேற்ற பின்னர் 2.7 மில்லியன் டொலராக இருந்த பெப்ஸியின் வருமானம், 6.5 மில்லியன் டொலராக உயர்ந்தது.

பின்னர் தனது கடும் உழைப்பால் பெப்ஸி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திரா 2006ல் பொறுப்பேற்றார்.

நான் என் பணியின் வேகத்தை எந்த நேரத்திலும், எந்த சூழலிலும் குறைத்து கொண்டதில்லை - இந்திரா நூயி

இதன் மூலம் பெப்ஸி & கோ நிறுவனத்தின் வரலாற்றில் ஐந்தாவது தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றவர் என்ற பெருமையை இந்திரா பெற்றார்.

advertisement

கடந்த 2011ல், 17 மில்லியன் டொலரை ஊதியமாக பெற்ற இந்திரா கடந்த 2016ல் 29.8 மில்லியன் டொலரை ஊதியமாக பெற்றுள்ளார்.

உலக புகழ்பெற்ற போர்ப்ஸ் பத்திரிக்கையில் கடந்த 2008, 2009, 2010, 2011, 2012, 2013, 2014 ஆகிய வருடங்களில் உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் இந்திராவும் இடம் பிடித்துள்ளார்.

நீங்கள் உயர்ந்த இடத்துக்கு வந்து விட்டால் எல்லாம் தெரிந்து விட்டதாக அர்த்தம் கிடையாது, தொடர்ந்து கற்க உலகில் நிறைய விடயங்கள் உள்ளது - இந்திரா நூயி

மேலும், கடந்த 2013ல் NDTV வெளியிட்ட உலகில் வாழும் வரலாற்று மனிதர்களாக இருக்கும் 25 பேர் பட்டியலிலும் இந்திரா இடம் பிடித்துள்ளார்.

இதற்காக இந்திய ஜனாதிபதியிடம் அவர் விருது வாங்கியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், இதுவரை பல்வேறு பல்கலைகழகத்திலிருந்து 10 முறை கெளரவ மருத்துவர் பட்டத்தையும் இந்திரா வாங்கியுள்ளார்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments