12 வயதில் சிஇஓ: தேனீக்களை வைத்து கோடிகளில் தொழில் செய்யும் ஆச்சரியம்

Report Print Raju Raju in தொழிலதிபர்
0Shares
0Shares
lankasrimarket.com

அமெரிக்காவை சேர்ந்த 12 வயதான சிறுமி, தேனீயிலிருந்து எடுக்கப்பட்ட இயற்கையான தேனை வைத்து எலுமிச்சை பழச்சாறு தயாரித்து மிகப்பெரிய தொழிலதிபராக உருவாகியுள்ளார்.

அமெரிக்காவின் Texas மாகாணத்தை சேர்ந்தவர் Mikaila Ulmer (12), இவர் தற்போது ”மீ அண்ட் தி பீஸ் லெமனேட்” என்ற நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.

Mikaila இந்த இளம் வயதில் தொழிலதிபராக காரணமே தேனீக்கள் தான். ஆம், தேனீக்களிலிருந்து எடுக்கப்படும் தேனுடன், சுவையான புதினா, ஆளிவிதை, எலுமிச்சை ஆகியவைகளை கலந்து BeeSweet Lemonade என்னும் பெயர் கொண்ட இயற்கை பானத்தை தயாரித்து பெரிய அளவில் விற்பனை செய்து வருகிறார்.

அமெரிக்காவில் பல இடங்களில் கிளைகளை கொண்டு இயங்கும் Whole Foods சூப்பர் மார்க்கெட் நிறுவனம் தனது 55 கடைகளில் Mikaila நிறுவனம் சார்பில் தயாராகும் பானத்தை விற்பனை செய்து வருகிறது.

இதற்காக 11 மில்லியன் டொலர் ஒப்பந்தம் Mikaila நிறுவனத்துடன் போடப்பட்டுள்ளது.

Shark Tank என்னும் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் சிறுமிக்கு 60,000 டொலர் முதலீடு கிடைத்துள்ளது

இந்த வகை பானங்கள் கடந்த 1940ல் Mikaila கொள்ளு பாட்டி முதலில் தயாரித்தார். அது வாழையடி வாழையாக தற்போது Mikaila வரை வந்து சேர்ந்துள்ளது.

Mikaila, தேன் மூலம் தொடங்கிய இந்த வியாபாரத்தின் யோசனை 4 வயதாக இருக்கும் போது அவருக்கு வந்துள்ளது.

4 வயதில் Mikailaவை தேனீக்கள் கடித்துள்ளது. அப்போது வலியால் துடித்த அவர் பின்னர் அதன் மேல் கொண்ட ஆர்வத்தால் தேனீக்களை குறித்து படிக்க தொடங்கியுள்ளார்.

அதன் பின்னர் BeeSweet Lemonade பானம் தயாரிக்கும் தொழிலை கடந்த 2009ல் தொடங்கியுள்ளார்.

தன் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையைத் தேனீக்களைக் காப்பாற்றுவதற்காகச் செலவிட்டு வரும் Mikaila, தேனீக்களைக் காப்பதே தன் மிகப்பெரிய குறிக்கோள் என்கிறார்.

தேனீ இனங்கள் அதிகம் இறப்பதாக கூறும் Mikaila, தேனீ வளர்பவர்களும் இதனால் பாதிப்படைவதாக கூறுகிறார்.

2016ஆம் ஆண்டின் சிறந்த சில்லறை வர்த்தகர் விருது வென்றுள்ள Mikaila, மைக்ரோசாஃப்ட் நிறுவனர் சத்யா நாதெல்லாவுடன் சேர்ந்து, அவருக்கு நிகராக பல தொழில் மாநாடுகளில் சிறப்புரை ஆற்றியுள்ளார்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் பாராட்டையும் பெற்றுள்ள Mikaila, அவருக்கு தன்னுடைய நிறுவனத்தின் பானத்தை தன் கையால் அருந்த கொடுத்துள்ளார்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments