ஒரு டாக்ஸியில் தொடங்கி இன்று கோடிகளில் வியாபாரம்: தொழிலதிபர் சாதித்த கதை

Report Print Raju Raju in தொழிலதிபர்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

பர்வீன் டிராவல்ஸ் பேருந்துகள் இன்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளை பல இடங்களுக்கு அழைத்து செல்கிறது.

பர்வீன் டிராவல்ஸ் பெயரில் இன்று 1300 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. 4000 தொழிலாளர்களுடன் 400 கோடி வர்த்தகத்தை இந்நிறுவனம் அடைந்துள்ளது.

advertisement

இதன் நிறுவனர் பெயர் அப்சல் (53). அப்சலின் தந்தை அல்லா பக்‌ஷ் கடந்த 1967ல் இரண்டு டாக்ஸிகளுடன் இத்துறையில் நுழைந்தார்.

அந்த சமயத்தில் சிறுவனாக இருந்த அப்சல் பள்ளி நேரம் முடிந்ததும் தந்தைக்கு உதவியாக வேலை செய்தார்.

பின்னர் கல்லூரியில் உயிரியல் பிரிவை தெரிவு செய்த அப்சல் படித்து கொண்டே ஒரு அம்பாசிடர் காரை வாங்கி சுற்றுலா சேவையை தொடங்கினார்.

எப்போதும் பரபரப்பாக இயங்கும் அப்சல் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே குடும்பத்துடன் நேரம் செலவழிக்க ஓய்வு எடுத்து கொள்கிறார்.

அதற்கு தனது அக்கா பெயரான பர்வீன் என்பதையே நிறுவனத்திற்கு சூடினார்.

அப்சலின் கடின உழைப்பால் பர்வீன் டிராவல்ஸ் வேகமாக வளர்ச்சியடைய தொடங்கியது.

சென்னை – திருப்பதி, சென்னை – திருச்சி, மதுரை – ராமேஸ்வரம், கன்னியாகுமரி – சென்னை போன்ற ஆன்மிகப் பயணங்கள் அப்போதே பிரபலமாக இருந்தன.

முதல் ஆண்டிலேயே ஒரு கார் ஆறு காராக வளர்ச்சியடைந்தது. பின்னர், ஐந்து ஆண்டுகளில் 100 அம்பாசடர் கார்களாக பர்வீன் நிறுவனம் வளர்ச்சி அடைந்தது.

2004-ல் ஓன்லைன் டிக்கெட் புக்கிங்கை முதன்முதலில் அறிமுகம் செய்தது பர்வீன் டிராவல்ஸ் நிறுவனம் தான்.

அதன் பிறகு சுற்றுலா பேருந்துகளை வாங்கி அந்நிறுவனம் இயக்க தொடங்கியது.

பின்னர், அதிக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கடந்த 1981ல் சென்னை - பெங்களூரு இடையே போக்குவரத்தை பர்வீன் டிராவல்ஸ் தொடங்கியது.

advertisement

அப்சலும் வாரக்கடைசியில் அப்பேருந்தில் பயணம் செய்து பயணிகளின் எதிர்பார்ப்புகளை அறிந்தார்.

பிறகு அசுர வளர்ச்சியடைந்த பர்வீன் டிராவல்ஸுக்கு இன்று மொத்தமாக 1300 வாகனங்கள் உள்ளன.

இந்நிறுவனத்தின் லாஜிஸ்டிக்ஸ் பிரிவான பர்வீன் எக்ஸ்பிரஸ், பார்சல்கள், வாடிக்கையாளர்களின் இடப்பெயர்வுக்கான தேவைகள் போன்றவற்றைக் கையாளுகிறது.

ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் இதன் மூலம் வருகிறது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments