உலக பணக்காரர்கள் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்ட பில்கேட்ஸ்: முதலிடம் யார் தெரியுமா?

Report Print Santhan in தொழிலதிபர்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

உலகின் பணக்கார நபர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த பில்கேட்சை பின்னுக்கு தள்ளினார் அமேசான் நிறுவனர் ஜெப் பெஜோஸ்.

உலக பணக்காரர்களின் பட்டியலில் கடந்த நான்கு ஆண்டுகளாக நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்.

advertisement

இந்நிலையில் பிரபல ஆங்கில இதழான போர்ப்ஸ் உலகின் பணக்கார நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில்அமேசான் நிறுவனர் ஜெப் பெஜோஸ் முதலிடத்தில் உள்ளார்.

பெஜோஸ்-க்கு அமேசான் நிறுவனத்தில் 17 சதவீதம் பங்குகள் உள்ளது என்றும் அவருடைய சொத்து மதிப்பு 90.9 பில்லியன் டொலர் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு அடுத்த இடத்தில் உள்ள பில்கேசின் சொத்து மதிப்பு 90.7 பில்லியன் டொலர் என கூறியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் போர்ப்ஸ் இதழ் மைக்ரோசொப்ட் நிறுவனர் பில்கேட்சை பின்னுக்கு தள்ளி அமேசான் தலைமை செயல் அதிகாரி ஜெப் பெஜோஸ் முதலிடத்தை பிடிக்கப் போகிறார் என்று தெரிவித்திருந்தது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்