நீட்டா அம்பானியின் செல்போனின் விலை தெரியுமா உங்களுக்கு?

Report Print Arbin Arbin in தொழிலதிபர்
0Shares
0Shares
lankasrimarket.com

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், உலக பெரும் பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் மனைவியான நீட்டா அம்பானி பயன்படுத்தும் செல்போனின் விலை அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

இது தொடர்பாக, சில இணையதளங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், நீட்டா அம்பானி பயன்படுத்தக் கூடிய செல்போனில் உள்ள பிரத்யேக விடயங்களை மையப்படுத்தி இத்தகைய செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளன.

அம்பானியின் குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலானோர் Blackberry மொபைல் பயன்படுத்தி வரும் நிலையில், நீட்டா அம்பானி Falcon Supernova iPhone 6 Pink Diamond பயன்படுத்தி வருகிறார். இதன் மதிப்பு 48.5 மில்லியன் டொலர்கள்.

2014ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செல்போன், சிறப்பு வாடிக்கையாளர்களுக்கானது. சிறப்பு ஆர்டரின் பேரில் இந்த செல்போன்கள் தயாரிக்கப்பட்டு டெலிவரி செய்யப்படுகின்றன. இத்தகைய பெரிய தொகையில் அதிநவீன பாதுகாப்பு வசதிகள் கொண்ட பிரைவேட் ஜெட் வாங்கிவிடலாம் என்பது பொதுத் தகவல்.

Falcon Supernova iPhone 6 Pink Diamond சிறப்பம்சங்கள் :

  • இந்த போனின் வெளிப்புறம் 24 கேரட் தங்கம் மற்றும் Pink Gold கொண்டு செய்யப்பட்டுள்ளது.
  • உடைக்க முடியாத வகையில் பிளாட்டினம் கோட்டிங் செய்யப்பட்டுள்ளது.
  • ஒரு பெரிய Pink Diamond இந்த போனின் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

Hack செய்ய முடியாதபடி முழுமையாக பாதுகாக்கப்பட்ட அமைப்பைக் கொண்டது. (யாரேனும் Hack செய்ய முயன்றால் உடனடியாக செல்போனின் உரிமையாளருக்கு தகவல் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.)

செல்வ செழிப்பில் திளைத்து வரும் முகேஷ் அம்பானி வசித்து வரும் வீடான ‘அண்டிலா’ உலகின் அதிக மதிப்புக் கொண்ட 10 வீடுகளில் ஒன்று.

இத்துடன், நீட்டா அம்பானி பயன்படுத்தும் Hand Bag-இன் விலையும் நம்மை அதிர்ச்சி அடைய செய்வதாக உள்ளது. நீட்டா அம்பானி பயன்படுத்தும் Hand Bag பிராண்ட்களான Snel, Goyard மற்றும் Jimmy Choo ஆகியவற்றின் ஆரம்ப விலையே 3 முதல் 4 மில்லியன் டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்