தள்ளுவண்டியில் பக்கோடா விற்றவர் இன்று கோடீஸ்வரர்: சாதனை மனிதரின் கதை

Report Print Raju Raju in தொழிலதிபர்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் நகைக்கடை என்றாலே நம்பர் 1 அகர்வால் நகைக்கடை தான்.

இதன் உரிமையாளர் பெயர் சந்த் பிஹாரி(61), இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 1956ல் பிறந்தார்.

advertisement

சூதாட்ட பழக்கம் கொண்ட பிஹாரியின் தந்தை எல்லா பணத்தையும் அதன் மூலம் இழந்தார், இதன் காரணமாக குடும்பத்தில் கடும் நிதிநெருக்கடி ஏற்பட பிஹாரியால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை.

இதையடுத்து குடும்பத்தை பிஹாரின் தாய் பார்த்து கொள்ள தொடங்கினார், பிஹாரிக்கு 10 வயது இருக்கும் போது அவர் தாய் தள்ளுவண்டியில் பக்கோடா கடை ஆரம்பித்தார்.

அக்கடையில் சந்த் பிஹாரி தன் அண்ணன் ரத்தனுடன் சேர்ந்து உதவிக்குச் செல்வார்.

தினமும் 100 ரூபாய் வருமானம் வரும், பிறகு 12 வயதில் பிஹாரிக்கு சேலைக்கடையில் 300 ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது.

தொழில்துறையில் சிறந்த சாதனையாளர் விருது 2012ல் சந்த் பிஹாரிக்கு வழங்கப்பட்டுள்ளது.

1972ல் ரத்தனுக்கு திருமணம் ஆனது. இதையடுத்து தனது மாமனார் வீடு உள்ள பீகாருக்கு அவர் சென்று நடைப்பாதையில் சேலை வியாபாரம் தொடங்கினார்.

உதவிக்கு தனது தம்பி பிஹாரியை, ரத்தன் 1973ல் அழைத்து கொண்டார்.

தினமும் சேலை வியாபாரத்தில் 300 ரூபாய் சம்பாத்தியம் கிடைத்தது, இது அதிகமாகி கொண்டே செல்ல அடுத்த ஆண்டே இருவரும் சேர்ந்து ஒரு கடையை வாடகைக்கு எடுத்து சேலை வியாபாரம் செய்தார்கள்.

பிஹாரியின் கடும் உழைப்பால் அவர்களின் மாத விற்பனை 80,000- 90,000 ரூபாய் என அதிகரித்தது.

துரதிஷ்டவசமாக 1977ல் அவர்களின் கடையில் கொள்ளையடிக்கப்பட்டு நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் களவு போயின.

இதையடுத்து சேலை வியாபாரத்தை விட்டு சென்ற ரத்தன் ரத்தினக்கற்கள் விற்கும் தொழிலை ஆரம்பித்தார், அதுகுறித்த யோசனையை பிஹாரிக்கும் கூறினார்.

advertisement

ரத்தினக்கற்கள் குறித்த விடயங்களை கற்று கொண்ட பிஹாரி கடை கடையாக சென்று அதை விற்க அதிக லாபம் வர தொடங்கியது.

தொழிலில் நேர்மையாக இருந்து, மன உறுதியுடன் கனவுகள் மீது நம்பிக்கை வைத்தால் அனைத்தும் சாத்தியம் - சந்த் பிஹாரி

பத்து ஆண்டுகள் கடும் உழைப்புக்குப் பின்னர் 10 லட்ச ரூபாய் முதலீடு அவரால் திரட்ட முடிந்தது.

அதை வைத்து கடந்த 1988ல் தங்க நகை வர்த்தகத்தை பிஹாரி தொடங்கினார். அடுத்த 12 ஆண்டுகளில் ரத்தினக் கற்கள், தங்க நகைகள் விற்பனையில் தரமான வணிகராக உயர்ந்தார்.

அதன் பிறகு சந்த் பிஹாரி, அகர்வால் பிரதர்ஸ் என்ற பார்ட்னர்ஷிப் நிறுவனத்தைத் தொடங்கினார்.

கடந்த வருடம் பிஹாரியின் தங்க நகைக்கடை 17 கோடி வர்த்தகம் செய்துள்ளது. தற்போது முழுக்க தங்க நகைகள் மீதே கவனம் செலுத்தும் பிஹாரி வியாபாரம் மட்டுமின்றி தங்க நகைகளையும் வடிவமைப்பு செய்கிறார்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்