ஐடி வேலையை உதறிதள்ளி விட்டு டீக்கடை தொழில்: ஆச்சரியப்படுத்தும் இளைஞர்

Report Print Raju Raju in தொழிலதிபர்
0Shares
0Shares
lankasrimarket.com

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் வசித்து வருபவர் சுரேஷ் கிருஷ்ணன், இவரின் பெற்றோர் படிக்காதவர்கள், ஆனால் மகனை நன்றாக படிக்க வைத்தார்கள்.

கடந்த 2006ல் சுரேஷ் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் பட்டப்படிப்பை முடித்து விட்டு சென்னையிலுள்ள ஐ.டி கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

ஆனால், அந்த துறையில் தனது பயணத்தை தொடராமல் இன்று மகிழ்ச்சியாக டீக்கடை நடத்தி வருகிறார்.

இதுகுறித்து சுரேஷ் கூறுகையில், ஐடி வேலையில் இருந்தாலும் மனதில் ஒரு குறை இருந்து கொண்டே இருந்தது, அதனால் வேலையை விட்டு விட்டு நண்பர்களுடன் தொழில் தொடங்கி ஐந்து வருடம் அதை நடத்தினேன்.

பிறகு, தனியாக ஏதாவது செய்யலாம் என யோசித்து டீ ஷாப் வைத்தேன் என கூறுகிறார். ஒரு வருடத்துக்குள் சென்னையின் மூன்று பகுதிகளில் டீ ஷாப் வைத்து உற்சாகமாகச் சுழன்று வருகிறார் சுரேஷ்.

இதுகுறித்து அவரின் தாய் வசந்தி கூறுகையில், சிறு வயதில் அப்பாவின் தொழிலில் உதவியாக இருந்த நாளிலிருந்தே அவனுக்கு தொழில் செய்யவே ஆர்வம்.

முதலில், டீக்கடை வைக்க போகிறான் என சுரேஷ் சொன்ன போது பயமாக இருந்தது. பின்னர் என் மருமகள் கொடுத்த தைரியத்தில் அதற்கு சம்மதித்து அவனுக்கு ஊக்கம் கொடுத்தேன் என கூறியுள்ளார்.

சுரேஷ் மனைவி சங்கீதா கூறுகையில், டீக்கடையை அவர் ஆரம்பித்ததும், ஆர்டர் கொடுத்த கம்பெனிகளுக்கு டீ எடுத்து கொண்டு வேகமாக கிளம்புவார்.

அதைப் பார்த்தபோது, ஆரம்பத்தில் ஒரு மனைவியாக கண் கலங்கினேன், பலர் அவரை கிண்டல் செய்தார்கள்.

இப்போது அவரின் வளர்ச்சியை பார்த்து அவர்கள் வாயடைத்து போயுள்ளார்கள். ஒரு நாளைக்கு இரண்டாயிரம் கப் டீ வியாபாரம் ஆவதோடு சென்னையில் இருக்கும் பல கம்பெனிகளுக்கு எங்கள் ஷாப்பில் இருந்து டீ சப்ளை ஆகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்