சாம்சங் நிறுவன வாரிசுக்கு சிறை தண்டனை! மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல்

Report Print Peterson Peterson in தொழிலதிபர்
0Shares
0Shares
lankasrimarket.com

சர்வதேச அளவில் பிரபலமான சாம்சங் நிறுவன வாரிசான Lee Jae-yong என்பவர் அரசாங்கத்திற்கு லஞ்சம் அளித்த குற்றத்திற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென் கொரியாவை சேர்ந்த சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் செல்போன், தொலைக்காட்சி, குளிர்சாதனப்பெட்டி உள்ளிட்ட மின்சாத பொருட்களை உற்பத்தி செய்வதில் முன்னணியில் திகழ்ந்து வருகிறது.

இந்நிறுவனத்தின் அடுத்த வாரிசான Lee Jae-yong என்பவர் தான் சாம்சங் நிர்வாக தலைவராக பதவி வகித்து வந்துள்ளார்.

இந்நிலையில், லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தென் கொரியாவின் பெண் அதிபரான Park Geun-hye என்பவர் கடந்தாண்டு பதவி விலகினார்.

மேலும், இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இவ்விசாரணை தொடங்கியபோது, முன்னாள் அதிபருக்கு சாம்சங் நிறுவன வாரிசான Lee Jae-yong லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

அரசாங்க மூலம் சில சலுகைகளை பெறுவதற்காக முன்னாள் அதிபரின் நண்பருக்கு இவர் சுமார் 36 மில்லியன் டொலர் நன்கொடையாக கொடுத்தார் என்பது வெளிச்சத்திற்கு வந்தது.

இக்குற்றச்சாட்டை தொடர்ந்து அவர் கடந்த பெப்ரவரி மாதம் பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், Lee Jae-yong மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு தென் கொரியா நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

எனினும், லஞ்சம் அளித்த புகாரை ஏற்றுக்கொள்ளாத Lee Jae-yong இத்தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்