அன்று சாதாரண வருமானம்: இன்று ஆண்டுக்கு ஆயிரம் கோடி! சாதனை மனிதரின் கதை

Report Print Raju Raju in தொழிலதிபர்
0Shares
0Shares
lankasrimarket.com

ஆட்டோமொபைல் துறையில் இன்று முக்கிய புள்ளியாக திகழ்பவர் அனில் கோயல். இந்த துறை குறித்த அடிப்படை விடயங்கள் கூட தெரியாமல் இதில் நுழைந்து இன்று ஆண்டு வருமானமாக ஆயிரம் கோடியை ஈட்டுகிறார்.

30 வருடங்களுக்கு முன்னர் சரக்கு கப்பலின் கேப்டனாக இருந்தவர் அனில் கோயல். கடந்த 1986ல் புகழ்பெற்ற ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் நிறுவனர் பிரிஜ்மோகன்லாலுடன் அனிலுக்கு நட்பு ஏற்பட்டது.

இதையடுத்து தனது நிறுவனத்தின் விற்பனையாளராக இருக்குமாறு பிரிஜ்மோகன்லால் அனில் கோயலைக் கேட்டுக் கொண்டார்.

காடு ஆறு மாதம், நாடு ஆறு மாதம் என கப்பலில் வாழ்க்கையைக் கழித்த அனில் கோயலும் இதை ஏற்று டெல்லியின் ஹீரோ ஹோண்டா மோட்டார் டீலரானார்.

சரியான விலை, விற்பனைக்குப் பிறகு சிறப்பான சேவை இதுவே என் வெற்றிக்கு காரணம் - அனில் கோயல்

ஹிம்கிரி என்ற பெயரில் விற்பனையகம் தொடங்கிய அனில் முதல் மாதத்தில் 40 பைக்குகளை விற்றார்.

ஆட்டோமொபைல் தொழில் குறித்து பல விடயங்களை பின்னர் படித்து அடுத்த நான்கு ஆண்டுகளில் வட இந்தியாவில் முதன்மையான டீலராக உயர்ந்தார்.

பின்னர், மாதம் 1,500 பைக்குகளை விற்கும் விற்பனையகமாக அதாவது ஆண்டுக்கு 18,500 வாகனங்களை விற்பனை செய்பவையாக ஹிம்கிரி உயர்ந்தது.

கடந்த 2004-ல் கார் வியாபாரத்தில் கால் பதித்த அனில், டெல்லியில் ஹிம்கிரி ஹூண்டாய் என்ற விற்பனையகத்தை திறந்தார்.

அங்கு வியாபாரம் சூடு பிடிக்க மாதத்துக்கு நான்காயிரம் கார்கள் தற்போது விற்பனை ஆகிறது.

2008-ம் ஆண்டில் அசோக் லேலண்ட் வாகன விற்பனையகத்துக்கு ஒப்பந்தம் போட்டு அதிலும் அனில் சாதித்து வருகிறார்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்