முகேஷ் அம்பானி பயன்படுத்தும் காரின் விலை தெரியுமா?

Report Print Deepthi Deepthi in தொழிலதிபர்
0Shares
0Shares
lankasri.com

ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரும், உலகின் 22 வது பணக்காரரும் ஆவார்.

முகேஷ் அம்பானிக்கு கார்கள் என்றால் அதிக ஆசை. மார்க்கெட்டில் எந்த கார் அறிமுகமானலும் அதனை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பார்.

அம்பானி வைத்திருக்கும் ஒரு காரின் மதிப்பு மட்டும் ரூ. 8.5 கோடி. BMW 760Li ரக கார்தான் அம்பானிக்குப் பிடித்த வாகனம். இதன் உண்மையான மதிப்பு ரூ. 1.9 கோடிதான். ஆனால், முகேஷ் அம்பானிக்காக இந்த காரில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

குட்டி ராக்கெட் லாஞ்சரை ஏவினாலும் கூட இந்த காரின் கண்ணாடி உடையாது. ஒவ்வொரு கண்ணாடியும் 150 கிலோ எடையுடன் 65 மி.மீட்டர் தடிமன் கொண்டது.சுமார் 17 கிலோ எடை கொண்ட வெடிபொருட்கள் வெடிக்கச் செய்தாலும் கார் அசைந்து கொடுக்காது.

இதன் பெட்ரோல் டேங்க் self-sealing Kevlar பாதுகாப்பு செய்யப்பட்டவை. அதனால், எளிதீல் தீ பிடிக்காது. இந்த காரைத் தவிர Maybach 62 and a Mercedes-Benz S Class ரக கார்களிலும் முகேஷ் அம்பானி பயணம் மேற்கொள்வார்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்