அன்று கார் கழுவியவர் இன்று கோடீஸ்வரர்: சாதனை மனிதரின் கதை

Report Print Raju Raju in தொழிலதிபர்
0Shares
0Shares
lankasrimarket.com

தண்ணீர் சுத்திகரிக்கும் அக்வாபாட் என்ற நிறுவனத்தின் பொருட்கள் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பல்வேறு இந்திய மாநிலங்களில் விற்கப்படுகின்றன.

இதன் நிறுவனர் பெயர் பாலகிருஷ்ணா (34), ஆந்திராவின் சித்தூரில் பிறந்த இவரின் குடும்பத்தார் பால் விற்று பிழைப்பு நடத்தி வந்தனர்.

கஷ்டமான சூழலில் பள்ளிப்படிப்பை முடித்தவர், பின்னர் அரசு கல்லூரியில் ஆட்டோமொபைல் பட்டப்படிப்பை 1999-ல் முடித்தார்.

அம்மா தந்த ஆயிரம் ரூபாயுடன் பெங்களூருக்கு வேலை தேடி வந்த பாலகிருஷ்ணாவுக்கு மெக்கானிக் வேலை கிடைக்கவில்லை.

கடைசியாக மாருதி கார் நிறுவனத்தின் ஷோரூமில் 500 ரூபாய் சம்பளத்தில் கார் கழுவும் வேலை கிடைத்தது.

அக்வாபாட் நிறுவனத்துக்கு இதுவரை பல்வேறு விதமான 20 விருதுகள் கிடைத்துள்ளது.

சில காலம் அங்கு வேலை செய்த பின்னர் சி.ஆர்.ஐ பம்ப்ஸ் நிறுவனத்தில் இரண்டாயிரம் சம்பளத்தில் விற்பனை நிர்வாகிப் பணி பாலகிருஷ்ணாவுக்கு கிடைத்தது.

அங்கு சில வருடங்கள் வேலை செய்த நிலையில், அடோர் வெல்டிங் லிமிடெட் என்ற வெல்டிங் தயாரிப்பு நிறுவனத்தில் பனிரெண்டாயிரம் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

இப்படியே இவர் வாழ்க்கை சென்று கொண்டிருந்த நிலையில் 2011-ல் சுயமாக தொழில் செய்ய முடிவெடுத்தார். பல நிறுவனங்களில் வேலை செய்து நன்கு பக்குவப்பட்ட விற்பனையாளராக இருந்ததால் இந்த முடிவை பாலகிருஷ்ணா எடுத்தார்.

தான் சேமித்து வைத்திருந்த பணத்திலிருந்து 1.3 லட்சத்தை முன் பணமாக கொடுத்து வாடகைக்கு இடம் எடுத்த அவர், தனது நண்பரின் யோசனையை கேட்டு ஆர்.ஓ எனப்படும் சவ்வூடு பரவல் முறை (reverse osmosis) தயாரிப்பு தொழிலில் ஈடுபட முடிவெடுத்தார்.

தயாரிப்பின் தரம் மற்றும் நல்ல வாடிக்கையாளர் சேவையின் காரணமாக, நிறுவனத்தின் சீரான வளர்ச்சியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடிகிறது - பாலகிருஷ்ணா

சி.ஆர் பம்ப் நிறுவனத்தில் தன்னுடன் பணியாற்றிய நண்பர் ஒருவர் ஊரில் தண்ணீர் சுத்திகரிக்கும் ஆர்.ஓ-வை தயாரித்து வருகிறார் என்பதை அறிந்த பால்கிருஷ்ணா அவரின் ஆலோசனை பெற்று 20 ஆர்.ஓ கருவிகளுடன் ஹைதராபாத் திரும்பினார்.

தொழிலின் தொடக்கமே வெற்றிகரமாக இருக்க ஒரு மாதத்துக்குள் 1.2 லட்சம் மதிப்புள்ள ஆர்.யூ யூனிட்களை விற்பனை செய்தார்.

இரண்டு மாதங்கள் கழித்து, தம்முடைய தலைமையின் கீழ் அக்வாபாட் ஆர்.ஓ டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தை பாலகிருஷ்ணா தொடங்கினார்.

அவரின் கடின உழைப்பால் அக்வாபாட் நிறுவனம் வேகமாக வளர்ச்சியடைந்தது. லட்சத்தில் தொடங்கிய வர்த்தகம் தற்போது 20 கோடியில் வந்து நிற்கிறது. இந்தியாவில் உள்ள 1,500 ஆர்.ஓ நிறுவனங்களில் அக்வாபாட் முதல் 20 இடத்தில் தற்போது உள்ளது.

வரும் நிதி ஆண்டில் தனது நிறுவனத்தின் வருவாயை இருமடங்காக உயர்த்த வேண்டும் என்பதே பாலகிருஷ்ணாவின் தற்போதைய இலக்காக உள்ளது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்