மனைவிக்காக வேலையை விட துணிந்தேன்: மைக்ரோசாப்ட் சிஇஓ ருசிகர தகவல்

Report Print Raju Raju in தொழிலதிபர்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

மனைவிக்காக தனது வேலையை உதறி தள்ள நினைத்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ சத்யா நாதெள்ளா கூறியுள்ளார்.

அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருப்பவர் இந்தியரான சத்யா நாதெள்ளா (50).

advertisement

இவரின் ஹிட் ரெப்ரஷ் என்னும் நுால் அமெரிக்காவில் நேற்று வெளியிடப்பட்டது.

அதில் நாதெள்ளா கூறியிருப்பதாவது, கடந்த 1993ல் அனுவை திருமணம் செய்த பின், அவரை அமெரிக்காவுக்கு அழைத்து கொள்ள தீர்மானித்தேன்.

ஆனால் அமெரிக்க சட்டப்படி கிரீன் கார்டு உள்ளவர்கள், வெளிநாட்டு மனைவியை அழைத்து வந்து உடன் வசிக்க வைக்க அனுமதியில்லை.

இதன் காரணமாக எனது வேலையை உதறிதள்ளி விட்டு இந்தியாவுக்கு திரும்ப நினைத்தேன்.

அந்த சமயத்தில், தற்காலிக பணிக்கான எச்1–பி விசாவில், மனைவியை அழைத்து வரலாம் என தெரியவந்ததையடுத்து அனுவை அமெரிக்காவுக்கு அழைத்து வந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்