பல பெண்களுடன் காதல்: பிளேபாய் நிறுவனர் காலமானார்

Report Print Fathima Fathima in தொழிலதிபர்
784Shares
784Shares
lankasrimarket.com

உலகப் புகழ்பெற்ற பிளேபாய் இதழின் நிறுவனர் ஹூக் ஹெப்னர் காலமானார்.

அமெரிக்காவின் பிளேபாய் இதழுக்கு உலகம் முழுவதும் வாசகர்கள் உண்டு, இந்த இதழின் அட்டைப்படத்தில் பிரபலங்களின் நிர்வாணப் படங்கள் இடம்பெறும்.

இதை கௌரவமாக கருதும் பிரபலங்கள் ஏராளம், 1953ம் ஆண்டு இந்த இதழ் வெளியானாலும் 1975ல் 70 லட்சத்தை தாண்டி சாதனை படைத்தது, ஆனால் இன்டர்நெட் வளர்ச்சியால் விற்பனை சரியத் தொடங்கியது.

இதன் நிறுவனரான ஹூக் ஹெப்னர், வயோதிகம் காரணமாக 91 வயதில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காலமானார், இவரது மறைவு செய்தியை அவரது மகன் அறிவித்துள்ளார்.

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள ஹூக் ஹெப்னர், தனது 86 வயதில் 3வது திருமணம் செய்தார், பல்வேறு பெண்களுடனும் காதல் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்