முகேஷ் அம்பானியின் தற்போதைய சொத்துமதிப்பு

Report Print Deepthi Deepthi in தொழிலதிபர்
270Shares
270Shares
Seylon Bank Promotion

இந்திய பணக்காரர்களில் முதலிடத்தில் இருக்கும் தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஜியோ டேட்டா சேவையின் மூலம் அதிகரித்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லாப வளர்ச்சி 3.6% குறைந்து லாபம் ரூ. 7,506 கோடியாக இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை கடந்த மூன்று மாதங்களில் 13% உயர்ந்து இருக்கிறது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் இதர பொருட்கள் விற்பனையை மூன்றில் இரண்டு மடங்கு வைத்திருக்கிறது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்.

ரிலையன்ஸ் இண்டஸ்டரீஸ் நிறுவனத்தின் ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலையில் கடந்த காலாண்டில் 17.8 மில்லியன் டன் அளவுக்கு கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து இருக்கிறது. இது இதற்கு முந்திய காலாண்டோடு ஒப்பீடும் போது குறைவு. இந்தக் காலாண்டில் இதன் வருமானம் 61,693 கோடி ரூபாய் ஆகும்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜியோ இந்தியா முழுவதுமான மிகப் பெரிய 4ஜி நெட்வொர்க் வசதியினை தொடங்கியது. இதற்கு ரிலையன்ஸ் நிறுவனம் 30,000 கோடி முதலீடு செய்துள்ளது.

130 மில்லியன்ஸ் வாடிக்கையாளர்கள் ஜியோ நெட்வார்க்கை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம், 495 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

அம்பானியின் ஜியோ நெட்வார்க்கால் அவரது சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது, அவரது தற்போதைய சொத்து மதிப்பு US$36.5 billion ஆகும். இவர் உலக பணக்காரர்களில் 38 வது இடத்தில் இருக்கிறார்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்