முகேஷ் அம்பானியிடம் பணம் சேர்ந்ததற்கு என்ன காரணம் தெரியுமா?

Report Print Deepthi Deepthi in தொழிலதிபர்
0Shares
0Shares
Cineulagam.com

ஆசிய பணக்காரர்களில் முதலிடத்தில் இருப்பவர் முகேஷ் அம்பானி.

இவரது சொத்து மதிப்பு 41.1 பில்லியன் ஆகும். இவர் சமீபத்தில் பலதுறை தலைவர்கள் பங்குபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டபோது, தன்னிடம் பணம் சேர்ந்ததற்கு காரணம் குறித்து கூறியுள்ளார்.

என் வாழ்க்கையில் பணம் ஒரு பொருட்டே அல்ல. பணம் குறித்து நான் என்றும் கவலைப்பட்டதே இல்லை. என் வியாபாரத்தை விரிவாக்கும் ஒரு பொருளாகவே பணத்தை இதுவரை நான் பயன்படுத்தி வருகிறேன்.

புதிய சவால், வியாபார அச்சுறுத்தல்களை களைய எனக்கு பணம் உதவுகிறது.

சிறுவயது முதலே என் சட்டை பையில் என்றும் நான் பணம் வைத்துக் கொள்வதில்லை. அப்பழக்கம் இன்று வரை தொடர்கிறது. கிரெடிட் கார்டுகளும் என்னிடம் இல்லை. நான் செய்யும் செலவுகளுக்கு என்னுடன் இருப்பவரே பணம் செலுத்தி வருகிறார்.

என்னிடம் இவ்வளவு பணம் சேர்ந்ததற்கு இது கூட முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்