விஜய் மல்லையாவின் சொத்துக்கள் முடக்கம்: லண்டன் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Deepthi Deepthi in தொழிலதிபர்
0Shares
0Shares
lankasri.com

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டதால் அவரது வார செலவுக்கு 5,000 பவுண்டுகள் வழங்க வேண்டும் என லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா லண்டனில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான வழக்கு விசாரணை கடந்த டிசம்பர் 3-ம் தேதி லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் தொடங்கியது.

இந்த விசாரணையின் போது இந்தியாவில் விஜய் மல்லையாவின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதற்கு அளித்த உத்தரவு சர்வதேச அளவில் பொருந்தும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனால் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான சுமார் ரூ.10,000 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன.

சொத்துகள் முடக்கப்பட்டதால் தனது வார செலவுக்கு வழங்கப்படும் தொகையை 5,000 பவுண்டிலிருந்து 20,000 பவுண்டாக உயர்த்த வேண்டும் என்று கோரியிருந்தார்.

ஆனால் இவரது கோரிக்கையை வழங்கறிஞர்கள் மறுத்தனர். இறுதியில் விஜய் மல்லையாவின் வார செலவுக்கு 5,000 பவுண்டுகள் வழங்கவே லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்