11 மில்லியன் டொலர் சம்பாதித்த 6 வயது சிறுவன்

Report Print Arbin Arbin in தொழிலதிபர்
482Shares
482Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் 6 வயதே ஆன சிறுவன் தனது யூடியூப் சேனலால் ஆண்டுக்கு பல மில்லியன் டொலர் சம்பாதித்து வருகிறான்.

அமெரிக்காவில் ஒரு குடும்பத்தினரால் ந்டத்தப்படும் யூடியூப் சேனலில் அவர்களது 6 வயது சிறுவன் ரியான் விளையாட்டுப் பொருட்கள் குறிக்த்த முன்னோட்டம் அளித்து வருகிறான்.

குறித்த நிகழ்ச்சியானது பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 11 மில்லியன் டொலர்களை விளம்பரம் வாயிலாக சம்பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி தினசரி ஒரு வீடியோ பதிவேற்றிவரும் இந்த குடுமபத்தினர், சிறுவர்களூக்கான விளையாட்டுப் பொருட்களை மட்டுமே மதிப்பாய்வு செய்து வருகின்றனர்.

இதனிடையே சிறுவன் ரியான் தமக்கு பிடித்தமான விளையாட்டுப் பொருட்களை தமது மழலை மொழியால் மதிப்பாய்வு செய்ய, அந்த காணொளிகள் குறுகிய காலத்தில் வைரலாகியுள்ளது.

தற்போது 10 மில்லியன் சந்தாதாரர்களை கொண்ட ரியான் சேனல் மாதம் ஒரு மில்லியன் டொலர் அளவுக்கு வருவாய் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்