நான்கு நாட்களில் 2 பில்லியன் டொலர் சம்பாதித்த பெண்

Report Print Gokulan Gokulan in தொழிலதிபர்
0Shares
0Shares
lankasrimarket.com

சீனாவின் மிகப்பெரிய கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்று Country Garden Holdings Co.

இந்நிறுவனத்தின் துணைத்தலைவரான Yang Huiyan’s நான்கு நாட்களில் மட்டும் 2 பில்லியன் டொலர் சம்பாதித்துள்ளார்.

36 வயதான Yang சீனாவின் பணக்கார பெண்மணி மற்றும் தேசிய இளவயது பில்லினியர் ஆவார்.

ஹாங்காங் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்நிறுவனப் பங்குகள் திங்கட்கிழமை 7.4 சதவீதம் வரையில் உயர்ந்து 2018இல் 17 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.

இதன் மூலம் 2018ஆம் நிதியாண்டின் 4 நாட்கள் வர்த்தகத்தில் சுமார் 2.1 பில்லியன் டொலர் வரையில் உயர்ந்துள்ளது, ஜனவரி 5ஆம் திகதியின் படி யாங் ஹூயானின் சொத்து மதிப்பு 25.6 பில்லியன் டொலராகும்.

Country Garden Holdings Co நிறுவனத்தின் பங்குகளை கட்டுப்படுத்தும் உரிமையை கடந்த 2005ம் ஆண்டு, Yang-க்கு அவரது தந்தை அளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்