வாட்சப்-ல் இருக்கிறீர்களா அப்படியென்றால் இதை பாருங்கள்

Report Print Thuyavan in தொழிலதிபர்
0Shares
0Shares
Cineulagam.com

இக்கால தலைமுறைக்கு ஏற்றார் போல் அமைந்துள்ள வேகமான தருணத்தில் ஒருவர் செய்தி பரிமாற்றம் செய்ய சரியான தலமென்றால் அது வாட்சப் மட்டுமே. அப்படிப்பட்ட வாட்சப்பின் மூலம் தொழில் செய்து வளர்ச்சி அடையலாம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

சிறு தொழில் உரிமையாளர்களுக்கு பயனடையும் வகையில் இந்த செய்தி அமைந்துள்ளது. தங்களின் சொந்த இணையதளத்திற்கு நிகரான ஒன்றை வாட்சப்பில் உருவாக்கி, செயல்திறன்மிக்க முறையில் வணிகம் செய்யும் மென்பொருளை (App) அந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.

அமெரிக்கா, பிரித்தானிய, இத்தாலி, இந்தோனீஷியா மற்றும் மெக்ஸிகோ போன்ற நாடுகளில் மென்பொருள் வாட்ஸ்அப் பிஸ்னஸ் பெரிய அளவு இணைப்பின் மூலம் செயல்பட்டு வருகிறது. மின்னஞ்சல், கடை, முகவரி மற்றும் இணையதளம் அல்லது தொலைபேசி எண் ஆகிய அதிகாரப்பூர்வ தகவல்கள் மற்றும் விவரங்களை இதன் மூலம் தெரிந்துகொள்ளப்படுகிறது.

இது மட்டுமல்லாமல் குறுஞ்செய்தி, கணக்கு சரிபார்க்கப்படுதல் என அறிந்து கொள்ள இயலும். பொதுவாக ஒரு செய்தி அனுப்பினால் நீல நிற வடிவில் நாம் அனுப்பிய தகவல்கள் வெளிப்படும். அதேபோல் வியாபாரிகளுக்கு பச்சை நிற வடிவில் தகவல் பரிமாற்றம் குறித்த விடயங்கள் தெரியப்படும்.

'டெக்கிரன்ஜ்' இணையத்தளம் கடந்த ஆண்டு பேசியபோது, தொலைபேசி எண்களை பதிவிட்டு, வாட்ஸ்அப் வழியாக வணிகம் செய்யும் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டவர்கள் மட்டுமே, மக்களை தொடர்பு கொள்ள முடியும் என்று வாட்சப் உறுதிப்படுத்தியது. இனி வாட்சப் உபயோகிப்பவர்கள் தொழில் அதிபர்களாக மறுவார்களா என்று பார்ப்போம்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்