கங்காரு இறைச்சிகளை உண்ணுமாறு வலியுறுத்தும் சூழலியல் நிபுணர்!

Report Print Givitharan Givitharan in சூழல்
0Shares
0Shares
lankasrimarket.com

அவுஸ்திரேலியாவில் கங்காருக்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகின்றது.

இதன் காரணமாக சூழல் சமநிலையில் பாரிய மாற்றம் ஏற்படும் எனவும் இதனை மாறாது பேணுவதற்கு அவுஸ்திரேலிய மக்கள் கங்காரு இறைச்சிகளை அதிகமாக உண்ண வேண்டும் என சூழலியல் நிபுணர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டேவிட் பட்டன் எனும் இவர் அடிலைட் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் இருக்கின்றார்.

அவுஸ்திரேலிய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, கடந்த வருடம் கங்காருக்களின் எண்ணிக்கை 45 மில்லியன்களாக காணப்பட்டுள்ளது.

இது 2010 ஆம் ஆண்டு காணப்பட்ட எண்ணிக்கையை விடவும் 20 மில்லியன்கள் அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் சூழல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்