ஸோம்பிகளை பார்த்ததுண்டா? பெண்ணின் திகில் அனுபவம்

Report Print in ஐரோப்பா
ஸோம்பிகளை பார்த்ததுண்டா? பெண்ணின் திகில் அனுபவம்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் வீடியோ கேம் விளையாடும் பெண் ஒருவர் ஸோம்பிகளை பார்த்து மிரண்டு அலறும் காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி உள்ளது.

தொழிற்நுட்ப வளர்ச்சி வேகமாக அதிகரித்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் திரைப்படம், இசை, விளையாட்டு போன்றவற்றை நேரிடையாகவே அனுபவிக்கும் வகையில் தொழிற்நுட்பம் வளர்ந்துள்ளது. விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் அனைத்துமே சாத்தியம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

advertisement

இந்நிலையில் விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் வீடியோ கேம் விளையாடும் ஒரு பெண் பயந்து அலறும் வீடியோ வைரலாகியுள்ளது. நோர்வேயை சேர்ந்த ரினெடி என்ற பெண்மணி ஸோம்பிகளை கொல்லும் வீடியோ கேமை விர்ச்சுவல் ரியாலிட்டிதொழிற்நுட்பம் மூலம் விளையாடியுள்ளார்.

முதலில் சாதாரணமாக விளையாடிய அவர் ஸோம்பிகள் அருகே வரவர பயத்தில் அலற தொடங்கினார். விளையாட்டு என்பதை மறந்து உண்மையிலேயே தன்னை ஸோம்பிகள் நெருங்கி வருவதாக நினைக்க தொடங்கினார்.

இறுதியில் தான் அணிந்திருந்த விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டை கழற்றிய பின்பு தான் அவர் இயல்பு நிலைக்கு வந்தார். இந்த காட்சிகளை பதிவுசெய்த அவரது தோழி கார்ல் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments