பிச்சை எடுத்த பெண்மணியை நாடுகடத்திய அரசு!

Report Print Arbin Arbin in ஐரோப்பா
0Shares
0Shares
lankasri.com

டென்மார்க்கில் பிச்சை எடுப்பது குற்றவியல் நடவடிக்கை என்ற நிலையில், முதன்முறையாக பிச்சை எடுத்த பெண்மணி ஒருவரை அந்த நாட்டு அரசு நாடு கடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டென்மார்க்கில் தங்கியிருந்து முதன்முறையாக பிச்சை எடுத்த குறித்த ஸ்லோவாகியா பெண்மணிக்கு 40 நாட்கள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம், குறித்த தண்டனை காலம் முடிவுக்கு வந்த பின்னர் அந்த பெண்மணியை நாடுகடத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது.

குறித்த பெண்மணி பலமுறை டென்மார்க் தலைநகரில் பிச்சை எடுத்து வந்துள்ளதாகவும், இதனால் பல முறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டென்மார்க் வரலாற்றிலேயே பிச்சை எடுத்த காரணத்தால் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவது இதுதான் முதன்முறை என கூறப்படுகிறது.

மட்டுமின்றி குறித்த பெண்மணி ஐரோப்பிய ஒன்றிய குடிமகள் என்பதால் நாடுகடத்துவது என்பது சிக்கலான விடயம் என்றும், குறித்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

குற்றவியல் சட்டப்பிரிவு 197ன் படி காவல் துறையின் எச்சரிக்கையினை மீறி பிச்சை எடுப்பது என்பது 6 மாதம் வரை சிறை தண்டனைக்கு உரிய குற்றமாகும்.

பிச்சை எடுப்பது சட்டத்திற்கு புறம்பானது என்ற நிலையில் பல முறை குறித்த பெண்மணிக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments