ஐரோப்பிய நாடுகளில் உருவெடுத்துள்ள பிரச்சனை! ஒவ்வொரு குடிமகனுக்கும் மாத வருமானம்?

Report Print Raju Raju in ஐரோப்பா
0Shares
0Shares
lankasrimarket.com

ஐரோப்பிய யூனியனில் இருக்கும் நாடான Luxembourgவை சேர்ந்த பிரபல அரசியல்வாதியும் சமூக சேவகியுமான Delvaux-Stehres அளித்துள்ள முக்கிய பேட்டியில், ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஒரு பெரும் பிரச்சனை உருவாகியுள்ளது.

வேலையில்லாத திண்டாட்டம் தான் அந்த பிரச்சனையாகும். தொழில் நுட்ப புரட்சி என்ற பெயரில் ரோபோக்களை எல்லா பணிகளுக்கும் பயன்படுத்தினால் மனிதர்களுக்கு எப்படி வேலை வாய்ப்பு கிடைக்கும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எல்லோருக்கும் பொது அடிப்படை வருமானம் என்பது கட்டயமாக்க வேண்டும். அப்படியிருந்தால் தான் அனைவரும் சமுதாயத்தில் கெளரவமாக வாழ முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையை Delvaux-Stehres ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளார். இது சம்மந்தமான விவாதம் அடுத்த மாதம் அங்கு நடைபெறும் என அறியப்படுகிறது.

இதனிடையில், ஐரோப்பிய யூனியனை சேர்ந்த நாடான பின்லாந்தில் வேலையில்லாத குடிமகன்களுக்கு மாதம் €560 பணம் கொடுத்து இரண்டாண்டு பைலட் திட்டம் மூலம் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க அந்நாட்டு அரசு முயற்சி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments