ஐரோப்பிய நாடுகளில் வசிப்பவர்களின் கவனத்திற்கு: உலக சுகாதார மையத்தின் எச்சரிக்கை

Report Print Arbin Arbin in ஐரோப்பா
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

ஐரோப்பா கண்டம் முழுமையும் தட்டம்மை நோய் பரவி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் ஆய்வுகளின் அடிப்படையில் இத்தாலி மற்றும் ருமேனியா உள்ளிட்ட நாடுகளில் தட்டம்மை நோயால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

advertisement

இந்த ஆண்டு துவக்கத்தில் மட்டும் இத்தாலியில் 200 பேர் தட்டம்மை நோய் பாதிப்புக்கு உள்ளானதாக தகவல் வெளியானது.

இதே மாதத்தில் ருமேனியாவில் 3,400 கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான நோய் பாதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதில் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தட்டம்மை துரிதமாய் தொற்றக் கூடியது. நோய்த்தடுப்பு முற்றிலுமாக ஸ்தம்பித்துள்ள நாடுகளில் இது மிக அதிகமாக பரவி வருவதாக தெரிய வந்துள்ளது.

குறிப்பாக பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, போலந்து, ருமேனியா, சுவிட்சர்லாந்து மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் தட்டம்மை பரவலாக காணப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

நோய்த்தொற்று விரைவில் படரும் நாடுகள் தட்டம்மை தடுப்பு நடவடிக்கைகளில் மிக துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், தற்போது போதுமான நோய்த்தடுப்பு நடவடிக்கைகளால் குடிமக்களை பாதுகாப்பு வளையத்தில் வைத்திருக்கும் நாடுகள் மேலும் தட்டம்மை நோய் பரவாமல் சிறப்பு நடவடிக்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

பிரித்தானியாவில் கடந்த ஓராண்டில் மட்டும் 575 பேருக்கு தட்டம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தட்டம்மை பாதிப்புகள்
  • போதிய தடுப்பு நடவடிக்கைகளில் உட்படுத்தாத இளம் சிறுவர்கள் தட்டம்மை நோயால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் இது மரணம் வரை கொண்டு செல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
  • இருமல் மற்றும் தும்மல் காரணமாக தட்டம்மை நோய் மிக விரைவில் பரவும் வாய்ப்பு உண்டு.
  • தட்டம்மையால் பாதிக்கப்பட்ட நபர் புழங்கிய பகுதியில் 2 மணி நேரம் வரை குறித்த நோய் கிருமிகள் தங்கும்.
  • தட்டம்மை நோய் தொற்றின் முதல் அறிகுறி என்பது காய்ச்சல் மற்றும் சளி ஆகும். நோய் பாதிக்கப்பட்ட நபரால் தோல் வெடிப்பு ஏற்பட்டதன் நான்கு நாட்களுக்கு முன்னர் அல்லது பின்னர் அடுத்தவர்களுக்கும் நோயை பகிர வாய்ப்புகள் உண்டு.
  • தட்டம்மை நோய்க்கான மருத்துவம் இல்லை. இருப்பினும் உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்பதன் வாயிலாக தட்டம்மை நோயை எதிர்கொள்ளலாம்.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments