யூரோ போர் ஜெட் விமானம் ஸ்பெயினில் விபத்து

Report Print Thayalan Thayalan in ஐரோப்பா
யூரோ போர் ஜெட் விமானம் ஸ்பெயினில் விபத்து
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

தென்கிழக்கு ஸ்பெயினில் உள்ள இராணுவத் தளத்திற்கு அருகே யூரோ போர் ஜெட் விமானமொன்று இன்று வியாழக்கிழமை விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் குறித்த ஜெட் விமானத்தின் விமானி உயிரிழந்துள்ளதாக அவசர சேவைகள் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்பெயின் தேசிய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சாகச நிகழ்வில் ஈடுபடுத்தப்பட்ட குறித்த ஜெட் விமானமானது, நிகழ்வை தொடர்ந்து திரும்பிச் சென்றுக் கொண்டிருந்த வேளையிலேயே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விபத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்