வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிகப்பெரிய கல்லறை தொடர் ஐரோப்பாவில் கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in ஐரோப்பா
0Shares
0Shares
lankasrimarket.com

செக் குடியரசை சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் மிகப்பெரிய கல்லறை தொடர் ஒன்றினை ஐரோப்பாவில் கண்டுபிடித்துள்ளனர்.

சுமார் 30 வரையான கல்லறைகளில் 1,500 வரையான எலும்புக்கூடுகள் காணப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் நடுத்தர வயது முதல் முதிர் வயதுடையவர்களின் எலும்புக்கூடுகள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இக் கல்லறைகள் தேவாலயம் ஒன்றின் நிலக் கீழ் பகுதியில் இருந்தே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த தேவாலயமானது 1400 CE காலப் பகுதியில் கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

கல்லறைகளின் பரப்பளவு 2 சதுர மீற்றர்களாகவும், ஆழம் 2.5 மீற்றர்கள் முதல் 3 மீற்றர்கள் வரையும் காணப்பட்டுள்ளன.

இதேவேளை 1348 தொடக்கம் 1350 காலப் பகுதியில் ஏற்பட்ட Black Plague எனும் நோயினால் மில்லியன் கணக்கானவர்கள் ஐரோப்பாவில் மரமடைந்திருந்தனர்.

குறித்த கல்லறைகள் இவ்வாறு இறந்தவர்களுடையதாக இருக்கும் எனவும் ஆய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்