ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நிதிச்சலுகைகளை அதிகரிக்க இணக்கம்

Report Print Thayalan Thayalan in ஐரோப்பா
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நிதிச்சலுகைகளை அதிகரிக்க இணக்கம்
0Shares
0Shares
lankasrimarket.com

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பிரித்தானியா வழங்கும் நிதிச் சலுகைகளை அதிகரிப்பதற்கு பிரித்தானிய அமைச்சர்கள் இணங்கியுள்ளனர்.

இது தொடர்பான கூட்டம், டௌவிங் வீதியை அண்டி அமைந்துள்ள அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) பிரதமர் தெரேசா மேயுடன் நடைபெற்றபோதே, இந்த இணக்கப்பாட்டுக்கு அமைச்சர்கள் வந்துள்ளனர்.

எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்குத் தீர்மானித்துள்ளது.

இதனையடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பிரித்தானிய வழங்கும் நிதிச் சலுகைகளை அதிகரிப்பதற்கு அமைச்சர்கள் இணக்கப்பாடொன்றுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்