குடிபோதையில் தள்ளாடியபடி விமானத்தை ஓட்டச்சென்ற விமானி

Report Print Kabilan in ஐரோப்பா
89Shares
89Shares
lankasrimarket.com

ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கலில், குடிபோதையில் விமானத்தை ஓட்ட முயன்ற விமானியை பொலிசார் அதிரடியாக கைது செய்தனர்.

போர்ச்சுக்கலின் ஸ்டட்கார்ட் நகரில் இருந்து லிஸ்பனுக்கு, ‘Portugal Airline' என்ற விமானம் 106 பயணிகளுடன் புறப்பட தயாரானது. அப்போது எஞ்சின் அறைக்கு வந்த 2 விமானிகளில் ஒருவர் மதுபோதையில் இருந்துள்ளார்.

சரியாக நடக்க முடியாமல், தள்ளாடிய நிலையில் இருந்த அந்த விமானி குறித்து விமான நிலைய பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, விமானத்தின் எஞ்சின் அறைக்கு சென்ற பொலிசார், குடிபோதையில் தள்ளாடிய அந்த விமானியை கைது செய்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தினர்.

அங்கு அவருக்கு 2 லட்சம் பிணைத்தொகையில் ஜாமீன் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக லிஸ்பன் நகருக்கு செல்ல வேண்டிய அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.

Shuttterstock

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்