வெகு விமர்சையாக இடம் பெற்ற யாழ் கலை இலக்கியப் பெருவிழா

Report Print Sumi in நிகழ்வுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

யாழ்.பிரதேச செயலகமும், கலாசார பேரவையும், கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்திய யாழ்.பிரதேச செயலகத்தின் கலை இலக்கியப் பெருவிழா நேற்று(17) நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு யாழ்.திருமறைக் கலா மன்றத்தில் 'இலங்கையில் புகழ்பூத்த அமரத்துவம் அடைந்த சிற்பி செல்லையா சிவப்பிரகாசத்தின் அரங்கு' எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றுள்ளது.

யாழ்.பிரதேச செயலாளர் பொன்னம்பலம் தயானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு யாழ்.மாவட்ட காணி மேலதிக அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

இந்த நிகழ்வில், செல்லையா சிவப்பிரகாசத்தின் நினைவாகவும், சிற்பக்கலையில் செய்த சாதனைகளையும் பாராட்டும் வகையில், சிற்பி செல்லையா சிவப்பிரகாசத்தின் பாரியார் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், வாழ்த்துப்பாவினையும் யாழ்.மாவட்ட காணி மேலதிக அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் மற்றும் பிரதேச செயலாளர் பொ.தயானந்தன் ஆகியோர் இணைந்து வழங்கி கௌரவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, பாடசாலைகளில் நடாத்திய போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், ஊடகவியலாளர்களும், சாதனையாளர்களும் இளம் கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், இந்த நிகழ்வில், இந்து, கிறிஸ்தவ, முஸ்லீம் மதகுருமார்கள், மற்றும் கலைஞர்கள், பொது மக்கள், அரச உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments