பிரித்தானியாவில் இடம்பெற்ற "தேசத்தின் குரல்" மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வு

Report Print Jubilee Jubilee in நிகழ்வுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் உட்பட்ட இம்மாத (மார்கழி) மாவீரர்களுக்கும், மாமனிதர் யோசப் பரராஜசிங்கம் உட்பட அன்னிய சிறீலங்கா படைகளால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்குமான நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியாவில்இடம்பெற்றது.

தமிழீழமாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரித்தானியாவில் அமைந்துள்ள (oxford) உலகத் தமிழர் வரலாற்றுமைய மாவீரர் மண்டபத்தில் இந்தநிகழ்வு நேற்று (18-12-2016) ஞாயிறு மாலை 4:00 மணிக்கு இடம்பெற்றது.

திரு. வேணுகோபால் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொதுச்சுடரினை கிலிங்டன் தமிழ் பாடசாலை நிர்வாகி(தமிழ் கல்விக்கூடம்) திருமதி. சசிகலா நிரூபன் அவர்கள்ஏற்றிவைக்க நிகழ்வுகள் ஆரம்பமானது.

அடுத்து, பிரித்தானியத் தேசியக் கொடியை தொழில்கட்சி உறுப்பினரும், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளருமான திரு.ஜீவகாந்தன் ஜீவா) அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியை தமிழீழமாவீரர் பணிமனையைச் சேர்ந்த திரு. சதா அவர்கள் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து மாவீரர்களுக்கான பொது நினைவுத் தூபிக்கான ஈகச்சுடரினை மாவீரர்களான லெப்.கேணல் பாமா, லெ.கேணல் மாதவி, லெப்ரினன்வெங்கடேஸ் ஆகியோரின் தாயார் திருமதி. இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம் அவர்கள் ஏற்றிவைக்க, திரு.கிளி அவர்கள் மலர்மாலையினை அணிவித்தார்.

மக்களுக்கான பொது நினைவுத் தூபிக்கான ஈகச்சுடரினை திரு. பவா அவர்கள் ஏற்றி வைக்க, மலர்மாலையினை மாமனிதர் யோசப் பரராஜசிங்கம் அவர்களின் மகன் திரு. டேவிட் பரராஜசிங்கம்அவர்கள் அணிவித்ததைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

"தேசத்தின்குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களின்திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை திரு. மலரவன் ஏற்றிவைக்க, மலர்மாலையினை உலகத் தமிழர் வரலாற்றுமையத்தின் முக்கிய உறுப்பினரும், நீண்டகாலதேசிய செயற்பாட்டாளருமான திரு. மயில்வாகனம் அவர்கள்அணிவித்தார்.

அரங்க நிகழ்வுகளாக, மாவீரர் வணக்க நடனத்தை1992-12-08 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரன் கடற்கரும்புலி மேஜர் இசைக்கோன் அவர்களின் மருமகளும், மாவீரர்களான லெப்.கேணல் பாமா,லெ.கேணல் மாதவி, லெப்ரினன்வெங்கடேஸ் ஆகியோரின் பேத்தியுமான செல்வி. கலைநிலா இராகுலன்வழங்க, கவிதைகளை செல்வி. பிரவீனா விஜயகுமார்,திருமதி. ஜெசிந்தா சுரேஸ், திரு. ஜெகதீஸ்வரன்நவரட்ணம் ஆகியோர் வழங்கினர்.

தலைமை உரையினை திரு. வேணுகோபால்ஆசிரியர் வழங்க, வரலாற்றுப் பதிவுகளைஉள்ளடக்கிய சிறப்பு உரையினை திரு.புரட்சி அவர்கள் நிகழ்த்தினார்.

திருமதி.சாந்தி சத்தியேந்திரன், திரு. இன்பன் மாஸ்ரர்,திரு. அகிலன் (நாடுகடந்த தமிழீழஅரசாங்கத்தின் பிரித்தானியாவிற்கான இளையோர் விவகார அமைச்சர்)ஆகியோர் நினைவுரைகளை வழங்கினர்.

எழுச்சிகானங்களை திரு. மைக்கல், திரு.சுரேஸ் ஆகியோர் வழங்க இன்றைய நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அமைந்திருந்தது.

குறிப்பாக பலர் தமது குடும்பங்களோடு வந்து கலந்து கொண்டிருந்தமையும், அதிகமான சிறுவர்கள் கலந்து சிறப்பித்திருந்தமையும் மன நிறைவையும், தமிழீழ விடுதலை நோக்கிய எதிர்காலத்தை குறித்துக்காட்டுவதாகவும் அமைந்திருந்தது.

மண்டபம்நிறைந்த மக்களோடு நடைபெற்ற இந்த நிகழ்வில் உறுதியேற்ற போதுகொடிகள் இறக்கப்பட்டு நிகழ்வுகள் யாவும் மாலை 6:30 ற்குநிறைவு பெற்றது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments