திருகோணமலை ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா விஞ்ஞாபனம் நடைபெறவுள்ளது.
இந்த புனராவர்த்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் மாதம் ஆறாம் திகதி காலை 09.36 மணி முதல் 10.28 மணி வரையில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை 03.02.2017 அன்று காலை எண்ணெய்க் காப்பு ஆரம்பமாகி நண்பகல் அளவில் பூர்த்தியாகும்.
மேலும், மண்டலாபிஷேகம் தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.