கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் திருக்கொடியேற்றம்

Report Print Reeron Reeron in நிகழ்வுகள்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

வரலாற்று சிறப்புமிக்க கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

advertisement

இதன்போது விசேட பூஜைகள் இடம்பெற்று கொடியேற்றத்தினைத் தொடர்ந்து சுவாமி உள்வீதி வலம் வந்துள்ளார்.

கொடியேற்ற பூஜை நிகழ்வானது சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக் குருக்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான அடியார்களும் பங்கேற்றிருந்தனர்.

இதனை தொடர்ந்து, தொடர்ச்சியாக திருவிழா பூஜைகள் நடைபெற்று, எதிர்வரும் 10 ஆம் திகதி தேரோட்டமும், அன்று இரவு திருவேட்டையும், மறுநாள் காலை தீர்த்தோற்சவமும் நடைபெற்று மகோற்சவம் நிறைவுபெறவுள்ளது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்