வரலாற்று சிறப்பு பெற்ற சித்தாண்டி முருகன் ஆலயத்தின் தீர்த்தோற்சவம்

Report Print Kumar in நிகழ்வுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

கிழக்கிலங்கையில் புகழ்பெற்ற முருகன் பேராலயங்களுள் வரலாற்று தொன்மை கொண்ட சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் பேராலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நேற்று காலை நடைபெற்ற தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெற்றுள்ளது.

குறித்த ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழா கடந்த 22ஆம் திகதி பிரம்மோற்சவ பிரதம குரு சிவஸ்ரீ கைலாசநாத வாமதேவக் குருக்கள், ஆலய ஸ்தானிக குரு சிவஸ்ரீ உலகநாத புஸ்பராஜ் குருக்கள் ஆகியோரின் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

இந்த நிலையிலேயே ஸ்ரீ சித்திர வேலாயுதரின் இறுதிநாள் தீர்த்தோற்சவம் நேற்று காலை சித்தாண்டி உதயன்மூலையில் அமைந்துள்ள சரவணப் பொய்கையின் பிரணவத் தீர்த்தத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இந்த இறுதி நாள் நிகழ்வில் பக்தர்கள் காவடிகள் எடுத்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிக் கொண்டதுடன், பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்