மன்னார் பிரதேச செயலகமும், மன்னார் கலாச்சார பேரவையும் இணைந்து, மன்னார் நகரப் பிரதேச கலாச்சார விழாவை நடத்தியுள்ளன.
குறித்த நிகழ்வு மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பரமதாசன் தலைமையில் நேற்று மாலை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், மன்னல் சிறப்பு மலர் வெளியீடும், சிறப்பு பட்டிமன்றமும் இடம்பெற்றதுடன், விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.