விநாயகர் விரத நிறைவினை முன்னிட்டு விசேட பூஜைகள்

Report Print Akkash in நிகழ்வுகள்
0Shares
0Shares
Cineulagam.com

விநாயகர் விரதங்களில் கார்த்திகை மாாதம் அபரபக்க பிரதமை முதல் மார்கழி மாதத்து பூர்வ பக்க சஷ்டி வரை உள்ள 21 நாட்கள் அனுஷ்டிக்கும் விநாயக சஷ்டி விரதமும் ஒன்றாகும்.

இந்த விரதமானது மார்கழி சஷ்டி, குமார சஷ்டி, பெருங்கதை விரதம் என்றும் அழைக்கப்படுகிறது.

கார்த்திகை திங்கள் கிருஷ்ண பட்சப் பிரதமை முதலாக மார்கழித் திங்கள் (வளர்பிறை) சஷ்டியின் இறுதியாகவுள்ள இருபத்தொரு நாளும் இந்த விரதம் கடைப் பிடிக்கப்பெறுகிறது.

இந்த நிலையில் கடந்த 24ஆம் திகதி விநாயகர் விரதம் நிறைவடைந்திருந்தது. இதன்போது கொழும்பிலுள்ள ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்திலும், கொச்சிக்கடை தம்பையா சத்திர ஸ்ரீ வினாயகர் ஆலயத்திலும் விசேட பூஜைகள் நடத்தப்படிருந்தன.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்