சிக்கென்ற சின்ன குஷ்பு ஹன்சிகாவின் பிட்னஸ் ரகசியம்

Report Print Printha in நவீன அழகு
0Shares
0Shares
Cineulagam.com

உடல் எடையை குறைக்க பலரும் பலவிதங்களில் முயற்சி செய்வார்கள். அந்த வகையில் நடிகர் நடிகைகளும் தங்களின் உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்வதில் மிகவும் கவனமாக இருப்பார்கள்.

சிறந்த நடிகையில் மிகவும் குண்டாக பப்ளிமாஸ் போன்று இருந்து, திடீரென்று சிக்கென்று மாறியிருப்பவர் தான் நடிகை ஹன்சிகா.

நடிகை ஹன்சிகா முதலில் நடித்த தமிழ் திரைப்படம் மாப்பிள்ளை, இந்த படத்தில் கொழுகொழுவென்று இருந்து, பின் சமீபத்திய திரைப்படங்களில் சிக்கென்று வந்தது, ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

சிக்கென்ற ஹன்சிகாவின் பிட்னஸ் ரகசியம்
  • தினமும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளில் அதிக நாட்டம் இல்லாமல், வீட்டில் செய்யப்படுகின்ற ராஜ்மா சாவல் என்ற உணவை அதிகமாக விரும்பி சாப்பிடுவார். இந்த உணவின் காரணமாகத் தான் உடல் எடையை குறைக்க முயலும் போது மிகவும் எளிமையாக இருந்தது என்று கூறுகிறார்.
  • தனது டயட் முயற்சியின் போது, குரு மிக்கி மேத்தா அவர்களின் அறிவுறுத்தல்களைப் அதிகமாக பின்பற்றி வருவதாக கூறுகின்றார்.
  • ஹன்சிகா காலை உணவு மிகவும் முக்கியமானது என்று நம்புவதுடன், காலையில் சாப்பிடும் உணவு நல்ல ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். அதனால் தினமும் காலையில் ஸ்கிம் செய்யப்பட்ட பால் மற்றும் ஆப்பிளை சாப்பிட்டு வருவார்.
  • உடல் எடையை குறைக்க முயலும் போது, தினமும் கார்டியோ மற்றும் எடை உடற்பயிற்சி என இரண்டையுமே கலந்து மேற்கொள்வார். அதற்காக தினமும் குறைந்தது இரண்டு மணிநேரம் தவறாமல் ஜிம்மில் நேரத்தைக் கழிப்பார்.
  • உடற்பயிற்சி செய்த பின் புரோட்டீன் மில்க் ஷேக் குடிப்பார். பின் மதிய வேளையில் ரொட்டி, தால், சாலட் மற்றும் தயிர் போன்றவற்றை மதிய உணவாக சாப்பிடுவார்.
  • குளிர்பானங்களை எப்போதுமே ஹன்சிகா குடிக்கவே மாட்டார். அதற்கு பதிலாக பிரஷ்ஷான பழச்சாறுகளை அதிகமாக சேர்த்துக் கொள்வார்.
  • இரவு நேரத்தில் சாப்பிடும் போது, எப்போதுமே தாமதமான நேரங்களில் உணவுகளை சாப்பிட மாட்டார். முடிந்த வரையில் இரவு 7 மணிக்கே இரவு உணவை சாப்பிட்டு விடுவார். இந்த டயட் முயற்சிகள் தான் நான் ஆரோக்கியமாகவும், சிக்கென்றும் இருப்பதற்கான காரணம் என்று கூறுகிறார்.

மேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments