நடிகை சாய் பல்லவியின் ரகசியம்

Report Print Printha in நவீன அழகு
0Shares
0Shares
lankasri.com
advertisement

நடிகைகள் என்றாலே அவர்களின் அழகான உடலமைப்பு மற்றும் அழகின் தோற்றம் தான் நம் கண் முன்னே நிற்கும்.

ஆனால் அந்த அழகை தக்க வைத்துக் கொள்ள ஒவ்வொரு நடிகைகளும் பலவித அழகு குறிப்புகளை பின்பற்றுவார்கள்.

advertisement

அந்த வகையில் பிரேமம் படத்தில் மலர் டீச்சராக அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த, நடிகை சாய் பல்லவி தனது அழகு ரகசியத்தை கூறுகிறார்.

நடிகை சாய் பல்லவி கூறும் அழகின் ரகசியம்

வீட்டில் இருக்கும் போது, எனது அம்மா எப்போதும் எனக்கு புரதம் நிறைந்த உணவுகளைக் கொடுப்பாங்க. அதுதான் எனது உடல் எனர்ஜிக்கு முதல் காரணம்.

நான் நிறைய டான்ஸ் ஆடுவேன் என்பதால், அதிக பசி எடுக்கும். நான் உணவுகள் சாப்பிடுவதை விட பழங்கள், தண்ணீர், ஜூஸ், இளநீர், மோர் போன்றவற்றை தான் உணவாக அதிகம் சாப்பிடுவேன்.

நான் ஒரு சைவப் பிரியர், அசைவ உணவுகளை நான் சாப்பிடவில்லை என்றாலும், அந்த உணவிற்கான எனர்ஜியை எனக்கு உள்ளது.

சிறிய வயதில் இருந்தே நான் யோகா செய்வேன். தினமும் காலையில் ஒரு லிட்டர் தண்ணீரும், நிறையப் பழங்களும் சாப்பிடுவேன்.

கிரீன் டீ குடிப்பதும், நேரம் தவறாமல், உணவு உட்கொள்வதும் தான் என்னுடைய நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு காரணமாக நினைக்கின்றேன்.

உணவு வகையில் கூட எண்ணெயில் பொரித்தது, வதக்கியதைத் தவிர்த்து, ஆரோக்கியமான ஆர்கானிக் உணவுகளை சாப்பிடுவேன்.

எனது அழகுக்காக, நான் அதிகம் ரிஸ்க் எடுக்க மாட்டேன். ஆனால் கெமிக்கல் ரசாயனங்கள் நிறைந்த சோப் போடுவதை தவிர்த்து, பயத்தம் பருப்பு மாவை சோப்பாகவும், தலைமுடிக்கு தேவையான, சத்தான உணவை மட்டுமே சேர்த்துக் கொள்வேன். கீரை, பழங்கள், பச்சைக் காய்கறிகள் அதிகம் சாப்பிடுவேன்.

எனக்கு பிடித்த டான்ஸ் கலை கூட எனது பிட்னஸ் ரகசியத்திற்கு உதவியாக உள்ளது. அதனால் நான் எப்போதும் மகிழ்ச்சியாக இருந்தாலும் ஆடுவேன், மகிழ்ச்சியாக இருப்பதற்கும் ஆடுவேன்.

நான் பாட்மின்டன் பிளேயர் எனபதால், தினமும் விளையாடுவேன். இதனால் பிட்டாக இருக்க முடியும். தினமும் ஒரு மணி நேரம், 100 முறை காயத்ரி மந்திரம் சொல்லி தியானம் செய்வேன். இது என்னுடைய கவனத்தை அதிகரிக்கவும், மன அழுத்தத்தை போக்கவும் உதவியாக இருக்கிறது.

நமக்காக எவ்வளவோ செய்யும் நம் உடலை, நோய் வந்த பின் சரிசெய்வதை விட, அதற்கு முன்னதாக சில விழிப்புணர்வுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நடிகை சாய் பல்லவி கூறியுள்ளார்.

மேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments