ஐஸ்வர்யா ராயின் பிரத்யேக ஆடை பற்றிய சுவாரசிய தகவல்கள்

Report Print Deepthi Deepthi in நவீன அழகு
0Shares
0Shares
lankasrimarket.com

ஆஸ்கர் விருது விழாவிற்கு அடுத்தபடியாக உலக புகழ்பெற்ற 17வது கேன்ஸ் திரைப்பட விழா இந்த ஆண்டு பிரான்சில் நடைபெற்று வருகிறது.

இதில், ஒவ்வொரு ஆண்டும் பிரயேகமான ஆடையை அணிந்துகொண்டு கலந்துகொண்டு கலக்கும் ஐஸ்வர்யா ராய், இந்த ஆண்டு பட்டாம்பூச்சி போன்று ஆடை அணிந்து வந்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.

10 அடி நீளத்தில் பட்டாம்பூச்சி வடிவத்தில் எம்பிராய்டரி செய்யப்பட்ட இந்த ஆடை பட்டு நூல்களை கொண்டு முழுமையான கைவேலைப்பாடுகளுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

ஐஸ்வர்யா ராய்க்காக, இந்த ஆடையை மைக்கேல் சின்கோ என்ற வடிவமைப்பாளர் உருவாக்கியிருந்தார். இந்நிலையில் இந்த ஆடையை வடிவமைப்பதற்காக சுமார் 125 நாட்கள் எடுத்துக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்