ஸ்ரீ கதிமலை சிவன் ஆலயத்தில் வரலக்ஷ்மி விரத பூஜை அனுஷ்டிப்பு

Report Print Arbin Arbin in விழா
82Shares
82Shares
lankasrimarket.com

இலங்கையின் சுன்னாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கதிமலை சிவன் ஆலயத்தில் வரலக்ஷ்மி விரத பூஜை அனுஷ்டிக்கப்பட்டது.

ஈழமணி திருநாட்டில் சுன்னாகத்தில் ஸ்ரீ கதிமலை சிவன் ஆலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வாழ்வுக்கு தேவையான சகல செல்வங்களையும் அள்ளி வழங்கும் ஸ்ரீ மகாலக்ஷ்மி தாயானவள் பால் கடலில் இருந்து தோன்றிய தினமாகிய சிரவண மாத பூரணைக்கு முதல் வெள்ளிக்கிழமை வரலக்ஷ்மி விரத பூஜை அனுஷ்டிக்கப்பட்டது.

இலங்கையிலே அஷ்ட லட்சுமிகளுக்கு தாமரையிலே தேர் வடிவில் ஆலயம் அமைத்து நடுவில் மகா லக்ஷ்மியும் சுற்றிவர தன லட்சுமி, தான்ய லட்சுமி, வீர லட்சுமி, விஜய லட்சுமி, சந்தான லட்சுமி, சௌபாக்ய லட்சுமி, ஐஸ்வர்ய லட்சுமி என அஷ்ட லட்சுமிகளும் வீற்றிருந்து அருள்பாலிப்பது ஸ்ரீ கதிமலை சிவன் ஆலயத்தின் சிறப்பாகும்.

மேலும் விழா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments