இந்தியாவில் ஆடம்பரத் திருமணங்களுக்கு வருகிறது ஆபத்து!

Report Print Thayalan Thayalan in விழா
இந்தியாவில் ஆடம்பரத் திருமணங்களுக்கு வருகிறது ஆபத்து!
411Shares
411Shares
lankasrimarket.com

திருமண நிகழ்வுக்கு வருகை தரும் விருந்தினர்கள் மற்றும் பரிமாறப்படும் உணவு வகைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்ட வரைவொன்று இந்தியப் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதனுடன், ஐந்து இலட்ச ரூபாய்க்கு அதிகமான செலவில் திருமணங்கள் செய்யப்பட்டால், அந்த மணமக்களின் தரப்பில் ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு உதவும் தனி நபர் சட்ட வரைவொன்றும் மன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த யோசனையை, பீஹார் மானிலத்தின் சர்ச்சைக்குரிய பாராளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ்வின் மனைவி ரஞ்சீத் ரஞ்சன் முன்மொழிந்துள்ளார்.

“தற்காலத்தில் திருமணங்கள் தங்களது செல்வ வளத்தை வெளிக்காட்டும் வகையில், பகட்டுத்தனமாகவே நடத்தப்படுகின்றன. இதனால், பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய குடும்பத்தினர் பாதிக்கப்படுகிறார்கள். நம் போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாட்டில் ஆடம்பரத் திருமணங்கள் குறித்து ஒரு கட்டுப்பாடு கொண்டுவரப்படவேண்டும்” என்று ரஞ்சீத் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதியளவில் பாராளுமன்ற ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவிருக்கும் இந்த கட்டாயப் புதிய சட்டத்தின்படி, ஐந்து இலட்ச ரூபாய்க்கு மேல் செலவிடப்படும் திருமணங்கள் குறித்து முன்கூட்டியே அரசுக்கு அறியத்தர வேண்டும் என்றும், செலவிட உத்தேசித்திருக்கும் தொகையில் 10 சதவீதத்தை வறிய பெண்களின் திருமணத்துக்காக அளிக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் அமுலுக்கு வரும் நிலையில், அனைத்துத் திருமணங்களும் திருமணம் முடிந்து அறுபது நாட்களுக்குள் பதியப்படவேண்டி ஏற்படும் என்றும் தெரியவருகிறது.

மேலும் விழா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments