கொழுப்பை கரைக்கும் எளிய பயிற்சிகள்: இதை செய்தாலே போதுமே

Report Print Printha in உடற்பயிற்சி
0Shares
0Shares
lankasrimarket.com

அன்றாடம் காலையில் எழுந்ததும் தவறாமல் உடற்பயிற்சி செய்தாலே, உடலில் உள்ள கொழுப்பினைக் கரைத்து உடல் எடையை மிகவும் எளிதில் குறைக்கலாம்.

அந்த வகையில் நமது உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல், உடலை கட்டுக்கோப்புடன் பராமரிக்க, 2 எளிய உடற்பயிற்சிகள் இதோ!

புஷ் அப் ரொட்டேஷன் (Push up with rotation)

முதலில் ஒருக்களித்துப் படுத்து, இடது கையை தரையில் ஊன்றி, உடல் தரையில் படாதவாறு, ஒரு பக்கமாக பாதம் மற்றும் கையால் பேலன்ஸ் செய்ய வேண்டும்.

பின் வலது கையை பின்புறமாகத் திரும்பி உயர்த்த வேண்டும். இதே நிலையில் சிறிது நேரம் இருந்து விட்டு, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல் மற்றொரு கைக்கும் செய்ய வேண்டும்.

பலன்கள்

  • இதயத் துடிப்பு சீராகும்.

  • தோள் மற்றும் கை சதைகள் வலுவடையும்.

  • இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்.

ரஷ்யன் ட்விஸ்ட் (Russian twist)

தரையில் படுத்து, தலை, மேல் உடல் மற்றும் கால் தரையில் படாதவாறு உயர்த்திக் கொள்ள வேண்டும்.

இரண்டு கைகளையும் விரல்களால் கோர்த்துக் கொள்ள வேண்டும். கைகளை வலது புறமாக அசைக்கும் போது, கழுத்தை இடது புறமாகவும், கைகளை இடது புறம் அசைக்கும் போது, கழுத்தை வலது புறமாகவும் திருப்ப வேண்டும்.

ஆனால் இந்த பயிற்சியை செய்யும் போது, கைகள், தலையைத் தவிர, உடலின் மற்ற எந்தப் பகுதியும் அசையக் கூடாது.

பலன்கள்

  • தொப்பை குறையும் .

  • தொடைப் பகுதியில் உள்ள கொழுப்புகள் கரையும்.

  • முதுகுத்தண்டு வலுவடையும்.

குறிப்பு

முதலில் இந்த பயிற்சிகளை 15 முறை செய்ய வேண்டும். பின் நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments