தினமும் காலையில் யோகாசனம் செய்து வந்தால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் சுப்த மத்ஸ்யேந்த்ராசனத்தை தினமும் தவறாமல் செய்து வந்தால் அற்புதமான நன்மைகளை பெறலாம்.
சுப்த மத்ஸ்யேந்த்ராசனம் செய்வது எப்படி?
முதலில் மல்லாந்து படுத்துக் கொண்டு கால்களை நேராக நீட்டி, கைகள் இரண்டையும் பக்கவாட்டில் வைத்து, மூச்சை வெளியேற்றியவாறு இடது காலை நேராக தரையில் வைத்துக் கொண்டு வலது காலை மார்பை நோக்கி மடக்க வேண்டும்.
பின் வலது காலை இடது புற பக்கவாட்டில் மடக்கிய நிலையிலேயே கொண்டு சென்று இடது கையால் வலது காலை பிடித்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின் வலது கை வலப்பக்கம் தரையில் நீட்டியவாறும், தலை வலப்பக்கம் வைத்து 10 நொடிகள் இதே நிலையில் இருக்க வேண்டும்.
அதேபோல் இடது காலை வலப்பக்கமாகவும், இடது கை இடப்பக்கம் நீட்டியவாறும், தலையை இடப்புறம் திரும்பியவாறும் இருக்க வேண்டும்.
இந்த பயிற்சியை இருபுறமும் மாற்றி மாற்றி 5 முறைகள் என்று செய்ய வேண்டும்.
பலன்கள்
- முதுகுத் தண்டுவடம் வலிமையாகி, இறுக்கமடையும்.
- இறுக்கமான தோள்களை தளர்வடையச் செய்யும்.
- முதுகெலும்புகள் இணைந்து, தசைகள் நீட்சி அடையும்.
- செரிமான மண்டலத்தில் இருந்து கழிவுகளை எளிதில் வெளியேறும்.
- குடல் இயக்கங்கள் சீராகும்.
- வயிற்றில் சேரும் அதிகப்படியாக வாய்வு எளிதில் வெளியேறும்.
- வயிற்று தசைகள் அனைத்தும் உறுதியாகும்.